28 வருசம் ஆச்சு.. தேனியில் முட்டி மோதும் திமுக.. குறுக்கே வந்து நிற்கும் பாஜக.. சபாஷ் போட்டி
தேனி: தேனி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வென்று 28 வருடங்கள் ஆகிவிட்டது.. கடந்த 25 வருடங்களில் ஒருமுறை கூட போட்டியிட்டதும் இல்லை. தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது. இந்த முறை பாஜக களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.
தேனி நாடாளுமன்ற தொகுதி 15 வருடங்களுக்கு முன்பு வரை பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியாக இருந்தது. இந்த தொகுதியில் 1952ம் ஆண்டு முதல் 2019 வரை நடந்த பல்வேறு நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை இரண்டு முறை மட்டுமே திமுக வெற்றி பெற்றுள்ளது. 1980ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கம்பம் என் நட்ராஜன் என்பவர் வெற்றி பெற்றார். அதன்பிறகு அடுத்த இரண்டுஆண்டுகளில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுகவே வெற்றி பெற்றது. அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜக்கையன் வெற்றி பெற்றார்.

அதன்பிறகு 1984, 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவின் வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். அதேநேரம் 1996ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஞானகுருசாமி வெற்றி பெற்றார். அதன்பிறகு 1999ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட செல்வேந்திரன் சுமார் 48000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதன்பிறகு கடந்த 20 வருடங்களில் நடந்த தேர்தலில் திமுக ஒரு முறை கூட போட்டியிடவில்லை..
திமுகவிற்கு வாக்கு வங்கி கணிசமாக உள்ள போதும், ஏனோ திமுக எப்போதுமே காங்கிரஸ் கட்சிக்குத்தான் ஒதுக்கி வருகிறது. 2004 மற்றும் 2009ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் சார்பில் களம் இறங்கிய ஜேஎம்ஆருண் வெற்றி பெற்றார். 2014ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவின் பார்த்திபன் வெற்றி பெற்றார். 2019ம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் ஓ பன்னீர்செல்வம் மகன் ஓபி ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.
தேனி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை 8 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. அதுவும் இப்போது அல்ல 80களில் ஒருமுறை 96ல் முறை என இரண்டு முறை தான் வென்றுள்ளது. வழக்கம் போல் காங்கிரஸ் கட்சிக்கு திமுக இந்த தொகுதியை ஒதுக்குமா அல்லது களத்தில் இறங்கி இந்த முறை வெற்றி பெற முயற்சி செய்யுமா என்பது தெரியவில்லை. திமுகவால் வெற்றி பெற முடியாத தொகுதி என்ற பெயருடன் தேனி நீண்ட காலமாக இருக்கிறது. இதை உடைக்குமா என்பது இன்னும் 3 மாதத்தில் தெரிந்துவிடும்.
தேனியை பொறுத்தவரை அதிமுகவின் கோட்டை என்கிற போதிலும், இந்த முறை ஓபிஎஸ் நீக்கப்பட்ட தன் காரணமாக தேனி சவாலாக இருக்கும் என்று சொல்கிறார்கள். இந்த முறை தேனி தொகுதியில் பாஜக களம் இறங்க ஆயத்தமாகி வருகிறது. பாஜக சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications