மயக்க மருந்து கொடுத்து.. ஆபாசமாக பேசி.. ஆத்திரத்தில் வெட்டினேன்.. 23 வயது நிரஞ்சனா வாக்குமூலம்
நபரை வெட்டி சாய்த்த இளம்பெண் வாக்குமூலம் தந்துள்ளார்
தேனி: "என் புருஷனோட மாமா அவர்.. எனக்கு மயக்க மருந்து தந்து.. அந்தரங்க விஷயங்களை பேச வைத்தார்.. ஆபாசமாக நடந்து கொண்டார்.. அவதூறு பரப்பினார்.. அந்த ஆத்திரத்தில்தான் மணிகண்டனை அரிவாளால் வெட்டினேன்" என்று 23 வயதான இளம்பெண் நிரஞ்சனா வாக்குமூலம் தந்துள்ளார்.
தேனி மாவட்டம் வேப்பம்பட்டியை சேர்ந்த தம்பதி பாண்டீஸ்வரன் - நிரஞ்சனா. பாண்டீஸ்வரனுக்கு 30 வயதாகிறது.. நிரஞ்சனாவுக்கு 23 வயது ஆகிறது. இருவரும் ராயப்பன்பட்டி லூர்துசாமி நகரில் ஒரு வீட்டில் குடியிருந்து வந்தனர். இந்நிலையில் மணிகண்டன் - ராஜேஸ்வரி ஆகியோருடன் இவர்களுக்கு முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் காலை இந்த தம்பதி, இலை அறுப்பதற்காக சண்முகநதி டேம் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பாண்டீஸ்வரனும் நிரஞ்சனாவும் அவர்களை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பாண்டீஸ்வரியும் - நிரஞ்சனாவும் மணிகண்டனை அரிவாளால் சரமாரியாக வெட்டியும் உள்ளனர். இதனை தடுக்க வந்த ராஜேஸ்வரியையும் வெட்டினர்.

ராஜேஸ்வரி
இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் மணிகண்டன் துடிதுடிக்க.. சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராஜேஸ்வரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.. தகவலறிந்து ராயப்பன்பட்டி போலீசாரும் வந்துவிட்டனர்.. ராஜேஸ்வரி சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து, பாண்டீஸ்வரன், நிரஞ்சனா தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாக்குமூலம்
23 வயதே ஆன நிரஞ்சனாவும் அரிவாளை கொண்டு ஒரு நபரை வெட்டி சாய்த்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது சம்பந்தமான போலீசார் நடத்தியபோது, நிரஞ்சனா சொன்னதாவது: "எங்களுக்கு 5 வருஷத்துக்கு முன்பு கல்யாணம் நடந்தது.. 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.. என் கணவரின் அக்காதான் ராஜேசுவரி, அவரது கணவர் மணிகண்டன்.

வாழை இலை வியாபாரி
மணிகண்டனுக்கு 33 வயதாகிறது.. வாழை இலை வியாபாரி அவர்.. சொந்தக்காரர் என்பதால், எங்க வீட்டிக்கு அடிக்கடி மணிகண்டன் வருவார்.. செல்போனிலும் பேசுவார்.. நாங்க 2 பேரும் சில நேரம் தனியாக சந்தித்து பேசினோம்.. இதை எங்கள் சொந்தக்காரர்கள் கண்டித்தனர்.. இதனால் எனக்கும் என் கணவனுக்கும் பிரச்சனை வந்தது.. அதேபோல, மணிகண்டன் வீட்டிலும் தகராறு வெடித்தது. நான் மணிகண்டனுடன் பேசுவதை நிறுத்திவிட்டேன்.

மயக்க மருந்து
ஆனாலும் மணிகண்டன் என்னிடம் செல்போனில் பேசி தொந்தரவு செய்ய ஆரம்பித்தார். சம்பவத்தன்று, வீட்டில் யாரும் இல்லாத சமயம், மணிகண்டன் வந்தார்.. எனக்கே தெரியாமல் டீயில் மயக்க மருந்தை கலந்து தந்துவிட்டார்.. அந்த சமயத்தில், ஆபாசமாகவும், அந்தரங்கமான விஷயங்களை பேச வைத்து, அதை செல்போனிலும் பதிவு செய்து கொண்டார்.. இதனை அவரது நண்பர்களிடம் போட்டு காட்டியுள்ளார்.

செக்ஸ் தொல்லை
இதனை சோஷியல் மீடியாவிலும் பதிவிடபோவதாக என்னிடம் மிரட்டினார்.. தினமும் செல்போனில் செக்ஸ் தொல்லை தந்தார்.. இது என் கணவனுக்கு தெரியவும்தான், திரும்பவும் சண்டை வெடித்தது. நான் மயக்கத்தில் அப்படி பேசிவிட்டேன், உண்மையிலேயே அந்தரங்க விஷயத்தை சுயஉணர்வுடன் பேசவில்லை என்று என் கணவரிடம் எவ்வளவோ சொல்லியும் நம்பவில்லை.. அதனால் இது உண்மையா, பொய்யா என்பதை தெரிந்து கொள்ளதான், மணிகண்டனை தேடி சென்றோம்.

வெட்டிவிட்டேன்
அப்போது மனைவி ராஜேசுவரியுடன் வாழை இலை அறுக்க சென்று கொண்டிருந்தார்.. அவரை மறித்து பேசினோம்.. தொடர்ந்து என் மீது அவதூறு சொல்லி கொண்டே இருந்தார்.. இதனால் ஆத்திரமடைந்த நான், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மணிகண்டனை வெட்டிவிட்டன்.. தடுக்க வந்த ராஜேசுவரியையும் வெட்டினேன்.. உடனே என் கணவன் கையில் இருந்த அரிவாளை புடுங்கி அவரும் மணிகண்டனை வெட்டினார்.. இதில் மணிகண்டன் அங்கேயே உயிரிழந்தார்" என்றார். இப்போது பாண்டீஸ்வரன், நிரஞ்சனா தம்பதி போலீஸ் பிடியில் உள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications