தேனி உமாவை விரட்டிட்டே போன காதலன் ஜோதிமணி! விழுப்புரம் ஏரிக்கரையில் டாடா ஏஸ் வண்டியில்! சபாஷ் போலீஸ்
தேனி: தேனி மாவட்ட இளைஞர் ஜோதிமணி குறித்த தகவல் கிடைக்காமல், கடந்த ஒன்றரை வருட காலம் விழுப்புரம் போலீசார் திணறிவிட்டார்கள்.. இந்த சம்பவம் குறித்த துப்பு எதுவும் கிடைக்காத நிலையில், போலீசாருக்கே இந்த வழக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது.. இப்போது, 3 பேர் குடும்பத்துடன் கைதாகி உள்ள நிலையில், அவர்களிடம் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.. என்ன நடந்தது தேனியில்? யாரிந்த ஜோதிமணி?
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பாதிரி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏரிக்கரையின் அருகில், கடந்த 2024, மார்ச் 1ம் தேதி ஆண் சடலம் ஒன்று கிடந்தது.. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் தந்தனர்..

அடையாளம் தெரியாத நபர்
போலீசாரும் விரைந்து வந்து, ஆண் சடலத்தை கைப்பற்றினார்கள்.. கயிற்றால் கழுத்தை நெரித்து அந்நபரை கொலை செய்திருப்பது தெரியவந்தது. எனவே, சடலத்தை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் என்ற விசாரணையை துவக்கினார்.
ஆனால், நீண்ட நாட்களாகியும் கொலை செய்யப்பட்டவர் யார்? என்பது உட்பட இந்த கொலை குறித்த துப்பு எதுவுமே கிடைக்கவில்லை.. இதனால், இறந்தவரின் போட்டோ, உடல் அடையாள விவரங்கள் போன்றவற்றை சோஷியல் மீடியாவிலும், நாளிதழ்களிலும் வெளியிடப்பட்டன.. அப்போதும் எந்த விவரங்களும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.
துப்பு கிடைக்காமல் சிரமம்
அந்தவகையில் இந்த வழக்கு, போலீசாருக்கே மிகவும் சவாலாக அமைந்தது.. பிறகு மாவட்ட எஸ்பி சரவணன் உத்தரவின்பேரில் திண்டிவனம் டிஎஸ்பி பிரகாஷ் மேற்பார்வையில் பிரம்மதேசம் காவல் ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது.. அனைத்து மாவட்ட காவல்துறையினருடன் தொடர்பு கொண்டு இறந்தவரின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை அனுப்பி, விசாரணையை விரிவுபடுத்தி வந்தனர்.
கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கழித்து, ஏரிக்கரையில் இறந்து கிடந்தவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.. உடனே தனிப்படை போலீசார் தேனி மாவட்டத்துக்கு விரைந்து சென்று, இறந்தவரின் அடையாளத்தை சொல்லி விசாரித்தபோது, இறந்தவர் ஜோதிமணி என்பவது தெரியவந்தது.
ஜோதிமணி - உமா
ஆண்டிப்பட்டி அருகே உள்ள எரதிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் இந்த 30 வயது ஜோதிமணி.. இவரை பற்றின தகவல்களை சேகரித்தபோதுதான், உமா என்பவரின் பெயர் அடிபட்டது.
அதாவது., ஜோதிமணியும், அதே பகுதியை சேர்ந்த உமா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.. இந்த காதல் விவகாரம் உமாவின் வீட்டுக்கு தெரிந்து, கடுமையான எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.. அத்துடன் ஜோதிமணியுடனான காதலை கைவிடுமாறு உமாவை, அவரது பெற்றோர் வற்புறுத்தியுள்ளனர்.
விடாமல் லவ் டார்ச்சர்
பிறகு அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து உமாவுக்கு திருமணமும் செய்து வைத்துவிட்டனர்.. ஆனால், திருமணம் முடிந்த பிறகும் உமாவை ஜோதிமணியால் மறக்க முடியவில்லை.. இதனால், எந்நேரமும் விடாமல் உமாவுக்கு தொந்தரவு செய்து வந்துள்ளார்... உமா கணவனோடு தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு வந்தபோதும், உமாவின் பின்னாடியே சென்று, லவ் டார்ச்சர் தந்து வந்துள்ளார் ஜோதிமணி.
இப்படி நாளுக்கு நாள் ஜோதிமணியின் டார்ச்சர் அதிகரித்ததால், என்ன செய்வதென்று தெரியாத உமா, பெற்றோரிடம் இதை பற்றி முறையிட்டுள்ளார்.. ஜோதிமணி உயிருடன் இருக்கும்வரை, தங்கள் மகள் நிம்மதியாக வாழ முடியாது என்று நினைத்த உமாவின் பெற்றோர், ஜோதிமணியை கொலை செய்யவும் முடிவெடுத்தனர்..

டாட்டா ஏஸ் வாகனம்
இதற்காக சம்பவத்தன்று உமாவும், அப்பா மாரியப்பன், அம்மா பஞ்சவர்ணம் ஆகியோர் ஜோதிமணியை டாட்டா ஏசி வாகனத்தில் பாதிரி ஏரிக்கரை அருகே அழைத்து சென்றுள்ளனர்.. அங்கே ஜோதிமணியின் கழுத்தை மூவரும் கயிற்றால் இறுக்கி கொன்றுள்ளனர்.. பிறகு சடலத்தையும் அங்கேயே வீசிவிட்டு சென்றது தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது..
இதையடுத்து உமாவையும், அவரது பெற்றோரையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.. கழுத்தை நெரித்து இளைஞரை கொன்ற முன்னாள் காதலி உட்பட 3 பேரையும், ஒன்றரை வருடத்திற்கு பிறகு போலீசார் கைது செய்துள்ள சம்பவம் விழுப்புரம், தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications