தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடிப்படை வசதிகள்.. தேனியில் தேர்தலை புறக்கணித்து ஊரை காலி செய்ய கிராம மக்கள் முடிவு

Google Oneindia Tamil News

தேனி: அடிப்படை வசதிகள் இல்லாததால் தேனியில் தேர்தலை புறக்கணித்து ஊரை காலி செய்ய கிராம மக்கள் முடிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் போடி அருகே துணை முதல்வர் பன்னீர்செல்வம் தொகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் சாலிமரத்துபட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் தேனி- மூணார் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Theni Village people decides to boycott Lok sabha elections

இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த மக்கள் மலைப் பகுதியில் குடியேறப் போவதாக பெட்டிப் படுக்கையுடன் ஊரை விட்டு வெளியேறுவதாகக் கூறி தீர்த்ததொட்டி- போடி- தேனி சாலையில் வந்து மறியல் செய்தனர்.

Theni Village people decides to boycott Lok sabha elections

10 வருடங்களுக்கும் மேலாக குடிநீர் சாக்கடை ரோடு வசதி, போக்குவரத்து வசதி, மயானம், கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லை என மக்கள் குற்றம்சாட்டினர். மேலும் சுகாதார கேடால் தங்கள் குழந்தைகள் பல நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பல புகார் மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.

Theni Village people decides to boycott Lok sabha elections

லோக்சபா தேர்தல்.. உங்கள் வாக்குச்சாவடி எங்கே இருக்கிறது?.. தெரிந்து கொள்ள இதை படியுங்கள்! லோக்சபா தேர்தல்.. உங்கள் வாக்குச்சாவடி எங்கே இருக்கிறது?.. தெரிந்து கொள்ள இதை படியுங்கள்!

English summary
Theni Village people decided to boycott Lok sabha elections as their village has not having basic amenities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X