தேனி பெண்.. கர்ப்பத்தை மறைத்து 3வது திருமணம்.. பெருந்தன்மையாக ஏற்ற 40 வயது 90ஸ் கிட்ஸ்க்கு ட்விஸ்ட்
தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்த மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவருக்கு 40 வயது ஆகிறது. இவர் 3வதாக ஒரு கூலித்தொழிலாளியை திருமணம் செய்தார். ஆனால் அப்போது வேறு ஒருவருடன் ஜாலியாக இருந்ததால் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த கர்ப்பத்தை தொப்பை என்று கூறி மறைத்துதான் கூலித்தொழிலாளியை திருமணம் செய்தார். திருமணமான 4 மாதத்தில் குழந்தை பெற்றெடுத்தார். அதனை, கணவரிடம் கொடுத்து விட்டு மீனா தப்பியோடிவிட்டார். பாவம் அந்த 40 வயது நபர் நொந்து போய் புலம்பிக் கொண்டிருக்கிறார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்த 40 வயது தொழிலாளி ஒருவர் திருமணம் செய்ய விரும்பினார். அவர் மீனா என்ற (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 40 வயது பெண்ணை திருமணம் செய்ய நிச்சயம் செய்தார். அதன்படி மீனாவுக்கும் அந்த தொழிலாளிக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது.

முதல் திருமணம்
40 வயதை நெருங்கி விட்ட அந்த தொழிலாளிக்கு, அது தான் முதல் திருமணம் ஆகும். ஆனால் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 2 திருமணம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் முதல் 2 கணவர்களும் இறந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து 3-வதாக அந்த தொழிலாளியை அப்பெண் கரம் பிடித்தார்.
தொப்பை
திருமணத்தின் போது அந்த பெண்ணின் வயிறு சற்று பெரிதாக இருந்துள்ளது. இது குறித்து அவரிடம் தொழிலாளி விசாரித்தார். அப்போது அது 'தொப்பை' என்று மீனா கூறிவிட்டாராம். அதனை திருமணம் செய்த கணவரும் நம்பி விட்டார்.
வயிறு பெரிதாகியது
இதற்கிடையே திருமணமான சில மாதங்களில் வயிறு மேலும் பெரிதாக இருந்ததால், அவர் தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஸ்கேன் பரிசோதனை செய்தார். அப்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனால் அந்த தொழிலாளி அதிர்ச்சி அடைந்தார். திருமணத்துக்கு முன்பே அந்த பெண் கர்ப்பமாகி இருந்திருக்கிறார். இருப்பினும் பெருந்தன்மையுடன் அந்த பெண்ணை ஏற்றுக்கொண்டு அவருடன் தொழிலாளி குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்.
பிரசவம்
இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு கடந்த மாதம் அரசு மருத்துவமனையில் பிரசவம் ஆனது. அப்போது மீனாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில நாட்களில், அந்த பெண், குழந்தையை வீட்டில் இருந்த தனது கணவரிடம் கொடுத்து விட்டு மருத்துவமனை சென்று பிரசவத்தின்போது போடப்பட்ட தையலை பிரித்து விட்டு வந்துவிடுவதாக தெரிவித்தாராம்.
கையில் குழந்தை
கைக்குழந்தையுடன் அந்த தொழிலாளி வீட்டில் இருந்தார். மருத்துவமனை சென்ற மனைவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே பசியால் குழந்தை அழுததால் சமாளிக்க முடியாமல் அவர் பரிதவித்து உள்ளார். அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தும் மனைவியை கண்டுபிடிக்க முடியாமல் தவித்த தொழிலாளிக்கு,அவர் குழந்தையை பெற்றுக் கொடுத்து விட்டு ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.
சின்னமனூர்
இதுகுறித்து அந்த இளைஞர் சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் ஒரு காப்பகத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர். அங்கு சென்று போலீசார் விசாரித்தனர்.
வாழ விருப்பமில்லை
அப்போது வேறு ஒரு போலீஸ் நிலையத்துக்கு சென்று தனது குழந்தையை தன்னிடம் பெற்றுக் கொடுக்குமாறு முறையிட்டதாகவும், போலீசார் தன்னை காப்பகத்தில் சேர்த்து விட்டதாகவும் அந்த பெண் கூறினார். மேலும் அந்த பெண், தனது கணவருடன் வாழ விருப்பம் இல்லை என்றும், குழந்தையை மட்டும் தன்னிடம் பெற்றுக் கொடுக்குமாறும் கூறினார். இதனையடுத்து அவரை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
புலம்பும் 90ஸ் கிட்ஸ்
பின்னர் அவர் விருப்பத்தின் பேரில், கணவரிடம் இருந்து குழந்தையை வாங்கி அந்த பெண்ணிடம் போலீசார் ஒப்படைத்தனர். குழந்தையை ஒப்படைத்த தொழிலாளி, 'இப்படி தன்னை ஏமாற்றி விட்டாரே' என்று அந்த பெண் குறித்து புலம்பியபடி அங்கிருந்து சென்றார். யாரோ ஒருவரை காதலித்து கர்ப்பம் ஆன பெண், பின்னர் ஒரு அப்பாவியை திருமணம் செய்து ஏமாற்றியதுடன், அவரை கடைசியில் நடுத்தெருவில் விட்டு சென்ற சம்பவம் தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications