தேனி தீபலட்சுமி.. பஸ் படிக்கட்டில் நின்றதுமே.. ஆண்டிப்பட்டி கண்டக்டர் பதறிட்டாரு.. கொடுமையை பாருங்க
தேனி: தேனியில் ஓடும் பஸ்ஸிலிருந்து தவறி வெளியே விழுந்துள்ளார் ஒரு பெண்.. இந்த வீடியோதான் நேற்றிலிருந்து இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்தவர் தீபலட்சுமி... இவர் நேற்று மாலை தனியார் பஸ்ஸில் தேனிக்கு பயணம் செய்துள்ளார்.. பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பஸ்ஸில் ஏறியதுமே, படிக்கட்டுக்கு பக்கத்திலிருக்கும் பாதுகாப்பு கம்பியை கெட்டியாக பிடித்தபடி நின்றுகொண்டார்..

டிக்கெட்: இப்படி நின்றபடியே, காசு கொடுத்து பஸ் டிக்கெட்டையும் பெற்றுக் கொண்டார்.. அந்த பஸ் டிக்கெட்டை தன்னுடைய பர்ஸில் வைக்க முயன்றார்.. அதனால், கம்பியை அதுவரை பிடித்து கொண்டிருந்தவர், அதை விடுத்து கைப்பையில் டிக்கெட்டை வைத்திருக்கிறார்.. பிடிமானம் எதுவுமே இல்லாத நிலையில், எதிர்பாராத விதமாக பஸ்ஸிலிருந்து வெளியே தவறி விழுந்துவிட்டார்..
இதில் தலையில் படுகாயம் அடைந்த தீபலட்சுமிக்கு ரத்தம் கொட்டியது.. இதைப்பார்த்து பதறிப்போய் சக பயணிகள் அலறி கூச்சலிட்டார்கள்..
கதறி கூச்சல்: இதையடுத்து பஸ் உடனடியாக நிறுத்தப்பட்டு, படுகாயமடைந்த தீபலட்சுமியை பொதுமக்கள் மீட்டு தேனி மருத்துவமனையில் அனுமதித்தனர்... அங்கு தீபலட்சுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.. இதற்கு பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அங்கு அவருக்கு தற்போது தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, தீபலட்சுமி படிக்கட்டிலிருந்து வெளியே வந்து சாலையில் விழும் வீடியோ இணையத்தில் வெளியாகி, காண்போரை பதைபதைக்க வைத்து வருகிறது.. இந்த வீடியோவில், படிக்கட்டுக்கு அருகிலிருக்கும் இருக்கையில் பயணிகள் உட்கார்ந்திருக்கிறார்கள்.. அங்குள்ள கம்பியைதான் தீபலட்சுமி பிடித்து கொண்டிருக்கிறார்..
பதைபதைக்கும் வீடியோ: டிக்கெட்டை பர்ஸில் வைக்கும்போது, தடுமாறி பின்பக்கமாகவே படிக்கட்டில் தவறி விழுகிறார்.. இதை பார்த்து பதறிய கண்டெக்டர் தீபலட்சுமியை பிடிக்க முயல்கிறார்.. ஆனாலும், ஓடும் பஸ் என்பதால், ரோட்டிலேயே வந்து விழுந்தார் தீபலட்சுமி.
படிக்கட்டிலிருந்து பெண் தவறி விழுவதும், தவறி விழும் பெண்ணை நடத்துநர் காப்பாற்ற முயற்சிப்பதும் இந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது. இது தொடர்பாக கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications