வேற லெவல் ட்விஸ்ட்.. தேனி ராஜா.. ஆசைப்பட்ட தமிழரசி.. உப்புக்கோட்டைக்கு சிட்டாய் பறந்து வந்து.. செம!
முகநூலில் பெண்ணுக்கு ஆபாச தொல்லை தந்த இளைஞர் போலீசில் சிக்கினார்
தேனி: ராஜா என்ற ஃபேஸ்புக் நண்பரை நேரில் பார்க்க ஆசைப்பட்டார் தமிழரசி.. ராஜாவும் தமிழரசியை பார்க்க உப்புக்கோட்டைக்கு சிட்டாய் பறந்து வந்தார்... அங்கே நடந்தது பாருங்க ஒரு ட்விஸ்ட்...!
அந்த இளைஞர் பெயர் ராஜா.. ஆனால் ஒரிஜினல் பெயர் அது இல்லை.. இந்த ராஜா என்ற பெயரில் ஃபேஸ்புக் அக்கவுண்ட் இவருக்கு இருக்கிறது.
Recommended Video

எந்த வேலை வெட்டிக்கும் போவது கிடையாது.. எப்ப பார்த்தாலும் ஃபேஸ்புக்கில், பெண்களுக்கு ஃபிரண்ட் ரிக்குவஸ்ட் தருவது, அவர்களுக்கு மெசேஞ்சரில் ஆபாச போட்டோக்களை அனுப்புவது, நடுராத்திரி போன் செய்து அசிங்க அசிங்கமாக பேசுவதுதான் இவரது ஹாபி.

அதிர்ச்சி
அப்படித்தான் திண்டுக்கல்லை சேர்ந்த பெண் ஒருவர் பேஸ்புக்கில் அறிமுகமாகி உள்ளார்.. வழக்கம்போல தன் வேலையை அவரிடம் காட்டி உள்ளார் ராஜா.. இதனால் அதிர்ந்து போன அந்த பெண், அதே தேனி மாவட்டத்தை சேர்ந்த தன்னுடைய தோழியான தமிழரசியிடம் இதை பற்றி சொன்னார்..

அட்ரஸ்
ராஜா தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதை தவிர, அவர் அட்ரஸ் சரியாக தெரியவில்லை.. அதனால் தமிழரசி, ராஜாவிடம் மெசேஞ்சரில் பேச்சு தந்தார்.. அப்படியே அவர் எந்த ஊர் என்பதையும் விசாரித்தார்.. ஆர்வமான தன்னை பற்றி பெண் ஒருவர் ஊர், பேர் எல்லாம் கேட்கவும் ராஜாவும் கடகடவென தன்னை பற்றின அனைத்து விஷயங்களையும் மெசேஞ்சரில் சொல்லி விட்டார்.

ஆசை
தமிழரசியை பார்க்கும் ஆவலில் பைக்கில் ரோமியோவாக பறந்து வந்தார் ராஜா.. அப்போது தமிழரசி நடுரோடு என்றும் பார்க்காமல் அங்கேயே ராஜாவை துவைத்து எடுத்தார்.. பிறகு டக்கென பைக் சாவியையும், ராஜாவின் செல்போனையும் பிடுங்கி கொண்டு, வீட்டில் இருந்து அவருடைய அப்பா, அம்மாவை வர சொன்னார்..! அதற்குள் அந்த பகுதியே கூடிவிட்டது.. என்ன நடந்தது என்று கேட்டு, வேடிக்கை பார்க்க வந்தவர்களும் ராஜாவை நாலு சாத்து சாத்திவிட்டு போனார்கள்..!

சரமாரி அடி
தமிழரசியை பார்க்கும் ஆவலில் பைக்கில் ரோமியோ பறந்து வந்தார் ராஜா.. அப்போது தமிழரசி நடுரோடு என்றும் பார்க்காமல் அங்கேயே ராஜாவை துவைத்து எடுத்தார்.. பிறகு டக்கென பைக் சாவியையும், ராஜாவின் செல்போனையும் பிடுங்கி கொண்டு, வீட்டில் இருந்து அவருடைய அப்பா, அம்மாவை வர சொன்னார்..! அதற்குள் அந்த பகுதியே கூடிவிட்டது.. என்ன நடந்தது என்று கேட்டு, வேடிக்கை பார்க்க வந்தவர்களும் ராஜாவை நாலு சாத்து சாத்திவிட்டு போனார்கள்..!

வார்னிங்
ஒருகட்டத்தில் சிக்கி திணறிபோன ராஜா, தமிழரசியின் காலிலேயே விழுந்துவிட்டார்.. மன்னிப்பும் கேட்டார்.. ஆனாலும் தமிழரசி விடவில்லையே.. நேராக ஸ்டேஷனுக்கு போய் ராஜா மீது புகார் தந்தார்.. இனி ஃபேஸ்புக் பக்கம் ராஜா சென்று, ஏதாவது வேலையை காட்டினால் அப்படியே அள்ளி கொண்டு போய்விடுவோம் என்று போலீஸார் வார்ன் செய்துள்ளனராம்.. தமிழரசி ராஜாவை நடுத்தெருவில் பின்னி பெடலெடுத்ததுதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications