அடுத்தவரின் மனைவியை நிர்வாணமாக்கி.. போலீசுக்கு ஓடிய பெண்.. இந்த காரியத்தை செய்தது யார்ன்னு பாருங்க
தேனியில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி பூஜை நடத்தப்பட்டுள்ளது
தேனி: தேனி மாவட்டத்தில் குடும்ப பிரச்னைக்காக தன்னிடம் 'குறி' கேட்க வந்த இளம்பெண்ணை ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் நிர்வாணமாக்கி பூஜை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடிநாயகனூர் பொட்டிபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் செல்வராஜ். இவர் சிறுவயதிலிருந்து ஊர் மக்களுக்கு 'குறி' பார்த்து வருகிறார். ஏதேனும் சுப காரியத்திற்கு செல்வதற்கு முன்னர் இவரிடம் சென்று 'குறி' கேட்டுவிட்டு போனால் அக்காரியம் இவர் சொன்னதை போலவே நடந்துவிடுகிறது என்று ஊர் மக்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் இவரிடம் சில நாட்களுக்கு முன்னர் தேனியின் மஞ்சள்நாயகன் பட்டியை சேர்ந்த கமாட்சி(22) எனும் இளம்பெண் ஒருவர் குறி கேட்க வந்திருக்கிறார்.
இவருடன் இவருடைய தோழியும் அவருடைய கணவர் என மொத்தமாக மூன்று பேர் வந்திருக்கின்றனர். காமாட்சிக்கும் அவரது கணவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், தற்போது அவரை பிறிந்துதான் காமாட்சி வாழ்ந்து வருகிறார். எனவே கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக குறி கேட்க வந்திருக்கிறார். முதல் முறை வந்த போது எல்லா பிரச்னையும் கேட்டுவிட்டு ஒரு நல்ல நாளன்று தான் மட்டும் தனியாக வருமாறு செல்வராஜ் கூறியிருக்கிறார்.

யாகம்
இதனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காமாட்சி மட்டும் செல்வராஜின் வீட்டிற்கு வந்திருக்கிறார். வீட்டில் வைத்து செல்வராஜ் மந்திரம் ஓதி யாகம் ஒன்றை வளர்க்கத் தொடங்கியிருக்கிறார். யாகத்தையடுத்து மந்திரித்து வைத்திருந்த தாயத்து தன்னிடம் இருப்பதாகவும் அதனை காமாட்சிக்கு கட்டிவிட வேண்டும் என்று கூறியுள்ளார். காமாட்சி கையில் கொடுங்கள் தான் கட்டிக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் செல்வராஜ் அதனை கொடுக்கவில்லை. இது மிகவும் சக்திவாய்ந்த கயிறு என்றும். எனவே தான் கட்டிவிட்டால்தான் அதன் முழு பலனும் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

தாயத்து
ஆனால் இக்கயிற்றை இங்கு வைத்து கட்டக்கூடாது எனவும், தன்னுடைய தோட்டத்து வீட்டுக்கு போய்விடலாம் என்றும் கூறியுள்ளார். செல்வராஜ் சொல்லவதை உண்மையென நம்பிய காமாட்சி அவருடன் தோட்டத்து வீட்டுக் போயிருக்கிறார். அங்கு போனவுடன் ஆடைகளை கழற்றச் சொல்லி செல்வராஜ் கட்டாயப்படுத்தியிருக்கிறார். இதற்கு காமாட்சி மறுப்பு தெரிவிக்கவே, இது எல்லாம் உன்னுடைய கணவருக்காகத்தான் என்று கூறியுள்ளார். அனைத்தையும் உண்மை என்று நம்பிய காமாட்சி ஆடைகளை அனைத்தையும் கழற்றி நிர்வாணமாகியுள்ளார். இப்போதுதான் செல்வராஜின் உண்மை முகம் வெளியில் தெரிந்திருக்கிறது.

நிர்வாணம்
அதாவது செல்வராஜ் தான் மறைத்து வைத்திருந்த செல்போனை எடுத்து காமாட்சியை போட்டோ எடுத்துள்ளார். இதனை காமாட்சி தடுக்க முயன்றபோது செல்வராஸஜ் காமாட்ச்சியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறார். இதனையடுத்து காமாட்சி கூச்சலிட்டுள்ளார். எனவே செல்வராஜ் உடனடியாக அங்கிருந்து சென்றிருக்கிறார். மேலும், நடந்த சம்பவம் அனைத்தையும் விரிவான ஒரு புகாராக எழுதி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ஆனால் இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எஸ்பி அலுவலகத்தில் தற்போது புகார் அளித்திருக்கிறார். இந்த புகார் மூலமாக விஷயம் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது.

பலாத்காரம்
பாலியல் பாலாத்கார முயற்சி மட்டுமல்லாது தாயத்துக்காக தன்னிடம் ரூ.20 ஆயிரத்தை முறைகேடு செய்துவிட்டதாகவும் காமாட்சி கூறியிருக்கிறார். ஆனால் இந்த விவகாரம் குறித்து செல்வராஜ் தரப்பிலும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில், தான் குறி சொல்வதை கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும், தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு தடையை உருவாக்க வேண்டும் என்று ஒரு சிலர் திட்டமிட்டு இளம்பெண் மூலம் தன்னை சிக்க வைக்க முயலகிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications