பெரியகுளம் டூ தேனி ரோடு! நள்ளிரவு 12.30 மணிக்கு கார் மீது விழுந்த கல்! வழிப்பறி கொள்ளை முயற்சி?
தேனி: பெரியகுளம் -தேனி சாலையில் நள்ளிரவு நேரத்தில் வழிப்பறி கொள்ளை முயற்சி நடைபெற்றதாக கட்டுமான பொறியாளர் ஒருவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
இந்தப் பதிவு பெரியகுளம் -போடி இடையே நள்ளிரவில் பயணிப்போருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளது. ஜோகின் பால் என்ற கட்டுமான பொறியாளர் தனக்கு நேர்ந்த அனுபவம் பற்றி பகிர்ந்துகொண்ட விவரம் வருமாறு;

''நேற்று இரவு 12.30 மணியளவில் பெரியகுளம் to தேனி சாலையில் வந்து கொண்டிருந்தேன். திடீரென வண்டி மீது ஏதோ விழுந்த சத்தம் கேட்டது. மனைவி வண்டியை நிப்பாட்டுங்கள் என்ன என பார்க்கலாம் என்றார். நான் இல்லை நிப்பாட்ட வேண்டாம் என கூறி வீடு வந்து சேர்ந்தேன். கண்ணாடியை குறி வைத்து கல் எறிந்திருக்கிறார்கள்.''
'' Metal bodyயில் dent விழுந்திருக்கிறது என்றால், மிக அருகிலும் வலுவாகவும் எறிந்திருக்க வேண்டாம். அவர்களின் நோக்கம் வண்டியை நிறுத்தி வழிப்பறி செய்வதாக இருக்கலாம். பெரியகுளம் , போடி போன்ற பகுதிகளில் அதிகாலையில் தனிநபர்களிடம் அதிக வழிப்பறி நடக்கிறது.'' இவ்வாறு அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.
நேற்று இரவு 12.30 மணியளவில் பெரியகுளம் to தேனி சாலையில் வந்து கொண்டிருந்தேன். திடீரென வண்டி மீது ஏதோ விழுந்த சத்தம் கேட்டது. மனைவி வண்டியை நிப்பாட்டுங்கள் என்ன என பார்க்கலாம் என்றார். நான் இல்லை நிப்பாட்ட வேண்டாம் என கூறி வீடு வந்து சேர்ந்தேன். கண்ணாடியை குறி வைத்து கல் pic.twitter.com/EGN2GyFmvh
— Jokin Jeyapaul (@jokinjey) February 3, 2024
பெரியகுளம் தாண்டி 5 கிமீ தூரத்திற்குள் இந்த வழிப்பறி கொள்ளை முயற்சி நடைபெற்றதாக பொறியாளர் ஜோகின் பால் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் இரவு நேரத்தில் என்ன செய்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சம்பந்தப்பட்ட நபர் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் டேக் செய்திருக்கிறார்.
முன்பு ஒரு காலத்தில் ஆண்டிப்பட்டி கணவாய் பகுதியில் நள்ளிரவு நேரங்களில் இப்படித் தான் நடந்ததாகவும் ரோந்துப் பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்ட பின்னர் அந்தப் பகுதியில் இது போன்ற நிகழ்வு நடைபெறுவதில்லை எனவும் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கமெண்ட்ஸ் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications