அதிமுக எங்கள் பக்கம் வரும்.. கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்.. வாக்களித்த பிறகு ஓபிஎஸ் பரபர பேட்டி
தேனி: தேனியில் வாக்களித்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், 'அதிமுக எங்கள் பக்கம்தான் வந்து சேரும். அதிமுக வேட்பாளர்கள் பற்றி அண்ணாமலை சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும்' என்று கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம். பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் ஓ பன்னீர் செல்வம், அதிமுக உரிமை மீட்புக்குழுவை தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில், இன்று தனது சொந்த ஊரான தேனி பெரிய குளத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வாக்களித்தார். தொடர்ந்து ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:-
ராமநாதபுரத்தில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உறுதியாக நான் வெற்றி பெறுவேன்.
தற்போது ராமநாதபுரம் செல்கிறேன். இந்தியா முழுவதும் மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்ற அலை உள்ளது. மக்கள் நல்ல ஆதரவை தருகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட முடிவு செய்தது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு எடுத்த முடிவு.
அதன்படி நான் போட்டியிடுகிறேன். அதிமுக உறுதியாக எங்கள் (டிடிவி தினகரன்+ஒபிஎஸ்) பக்கம்தான் வந்து சேரும். எடப்பாடி பழனிசாமி இந்த தேர்தலில் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. 2026-ல் மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம்.
தொண்டர்கள் இல்லாமல் வெறும் காண்ட்ராக்டர்களுக்கு தான் தேர்தலில் போட்டியிட எடப்பாடி வாய்ப்பு கொடுத்துள்ளதாக அண்ணாமலை கூறியதாக கேட்கிறீர்கள். அண்ணாமலை சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும். உறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணி இந்தியா முழுமைக்கும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியானது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications