விஜய்யை முதலில் வெளிய வர சொல்லுங்க.. எங்களிடம் உரசினால் அவ்வளவுதான்.. டிடிவி தினகரன் வார்னிங்
தேனி: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களம் காண்பதால் 4 முனை போட்டி நிலவி வருகிறது. தவெக தலைவர் விஜய் நேற்று திமுகவுடன் அதிமுகவையும் விமர்சித்தார். இதனால் அதிமுக, பாஜக விஜய்யை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு முன்பு விஜய்யை பாராட்டி வந்த டிடிவி தினகரன், விஜய்யை முதலில் வெளியில் வரச் சொல்லுங்கள். எங்களிடம் உரசினால் தவறாகிவிடும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஆட்சிக்கு வர ஆசைப்பட்டால் விஜய் வெளியில் வர வேண்டும், தெரியாமல் எங்களிடம் வந்து உரச வேண்டாம். நாங்கள் வெகுண்டு எழுந்தால் தவறாகிவிடும். அவர் சும்மா டெயலாக் பேசிக் கொண்டிருக்கிறார். ஊழலை ஒழிப்போம் என்று விஜய் சொல்கிறார். அவரின் படத்திற்கு 100 ரூபாய் டிக்கெட்டை 1,000 ரூபாக்கு விற்கிறார்கள்.

வழிகாட்டியை மறப்பார்களா
அதைக்கூட அவரால் தடுக்க முடியவில்லை. அவரால் எப்படி ஊழலை ஒழிக்க முடியும். பிளாக் டிக்கெட்டை ஒழிக்காதவர் ஊழலை எப்படி ஒழிக்க முடியும். முதலில் விஜய்யை வெளியே வர சொல்லுங்கள். ஊடகங்களை சந்திக்க சொல்லுங்கள். விஜய் இந்த தேர்தல் தாக்கம் ஏற்படுத்துவார். ஆனால் எம்ஜிஆர் போல எல்லாம் யாராலும் வர முடியாது. நான் ஒருபோதும் விஜய் எம்ஜிஆர் போல வருவார் என்று கூறவில்லை. இன்னொரு அண்ணா, புரட்சித் தலைவர் பிறக்க முடியாது.
சினிமாவில் நடிக்க வருவோர் எல்லாரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியுமா. அதிமுகவினர் அண்ணாவை மறந்துவிட்டார்கள் என கூறுகிறார். நாங்கள் அண்ணாவை பார்த்ததில்லை. அண்ணாவை நாங்கள் மறக்கவில்லை. வழிகாட்டியை யாராவது மறப்பார்களா அண்ணாவை தமிழ்நாடு மறக்குமா. 1977 எல்லாம் திரும்பாது. நான் சொல்கிறேன் 2011 தான் மீண்டும் திரும்பும். புரட்சி தலைவர் போட்டோவை வைத்து கொண்டு ஓட்டு கேட்கிறார்.
விஜயகாந்த் இடம்
என்ன பேசுகிறார் விஜய். வீட்டிற்கு அமர்ந்து கொள்கை எதிரி என பேசுவதா. எங்கள் கட்சியை ஊழலாட்சி என்று சொல்வதை ஏற்க முடியாது. தேவையில்லாமல் எங்களிடம் வம்பிழுக்கக் கூடாது. விஜய்யால் விஜயகாந்த் இடத்தைத்தான் தொட முடியும். நாங்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவர்கள். கூட்டணி குறித்து யோசித்துதான் முடிவு செய்வோம். அப்படித்தான் இந்த கூட்டணி உருவாகியுள்ளது" என்றார்.


Click it and Unblock the Notifications
