Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேனியில் வாங்கிய கடனுக்கு வீட்டை அபகரிக்க முயற்சி? பைனான்ஸ் அதிபருக்கு என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி நகராட்சி அலுவலகம் அருகே வசித்து வந்த பழக்கடை பாண்டி (72) என்பவர் தேனியில் பல்வேறு நபர்களுக்கு வட்டிக்கு பணம் வழங்கி பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவர் கடனுக்காக வீட்டை அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்காக அல்லிநகரத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் ஆறு பேர் அவரை திட்டமிட்டு தீர்த்துக்கட்டியதாக கூறப்படுகிறது.. இந்த விவகாரத்தில் ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தேனி கோட்டைக்களம் நேருஜி தெருவில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அருகில் வசித்தவர் பாண்டியன் என்ற பழக்கடை பாண்டியன் (வயது 72). இவருடைய மனைவி வசந்தா. இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

ttempt to seize the house for a loan taken in Theni What happened to the finance company owner

பாண்டியனின் சொந்த ஊர் பெரியகுளம் ஆகும். தேனியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கடை நடத்தினார். பின்னர் அவர் வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். கடந்த பிப்ர்வரி 2ம் தேதி பகல் 11.45 மணியளவில் பாண்டியன் ரேஷன் கடைக்கு செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே வந்தார். வீட்டுக்கு வெளியே தனது ஸ்கூட்டரில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான பைகளை வைத்து விட்டு, வீட்டின் இரும்பு கதவை மூட முயன்றார். ஒரு கதவை மூடிக் கொண்டு இருக்கும் போதே மர்ம நபர்கள் 2 பேர் அங்கு வேகமாக வந்தனர்.

அவர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் பாண்டியனை சரமாரியாக குத்தினர். இதில் கழுத்துப் பகுதியில் கத்திக்குத்து விழுந்தது. இதனால், ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்து பாண்டியனின் மனைவி வசந்தா வெளியே ஓடி வந்தார். வீட்டு வாசலில் தனது கணவர் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்தவுடன் தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராமலட்சுமி, ஜவகர் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் பாண்டியனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.

பின் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த கர்ணன் (38), பிரபாகரன் (34), வீரபாண்டி (27), சிவக்குமார் (44), வைரம் (20), மனோஜ் குமார் (21) ஆகியோர் என கண்டறிந்து ஆறு நபர்களை கைது செய்து தேனி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்தது தெரியவந்தது.

இதுபற்றி போலீசார் கூறும் போது, அல்லிநகரம் ராஜசேகர் வனிதா தம்பதி, மகள் திருமணத்திற்காக வனிதாவின் சசோதரி கார்த்திகா மூலம் பாண்டியனிடம் 2015ம் ஆண்டு மூன்றரை லட்சம் ரூபாய் கடன் வாங்கினாராம். அதற்காக ஈடாக அல்லிநகரத்தில் உள்ள வீட்டை எழுதி கொடுத்துள்ளனர். கடனை திரும்ப செலுத்தாததால் வீட்டை நீதிமன்றம் மூலம் பாண்டியன் ஜப்தி செய்ய முயன்றுள்ளார்.

இதையடுத்து கடன் தொகையை செலுத்துவதாக வனிதா, அவரது சகோதரர்கள் பிரபாகரன், கர்ணண் கூறினார்களாம். வாங்கிய தொகையை விட பல மடங்கு பணம் செலுத்தினார்களாம். ஆனாலும் கூடுதல் பணம் கோரி வீட்டை அபகரிக்க பாண்டியன் திட்டமிட்டாராம். வனிதா குடும்பத்தை அவதூறாக பேசினாராம் பாண்டியன்.

இதனால் ஆத்திரம் அடைந்த கர்ணன், பிரபாகரன் ஆகியோர், வீரபாண்டி, சிவக்குமார், கார்த்திகாவின் மகன் மனோஜ்குமார், வைரம் ஆகியோர் உதவியுடன் தாக்கி கொலை செய்தார்களாம். இந்த விவகாரத்தில் வனிதா, ராஜசேகர், கார்த்திகா ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+