திருப்பதியில் விஷ ஊசி போட்டு தற்கொலைக்கு முயற்சி.. உதித் சூர்யாவின் தந்தை பகீர் வாக்குமூலம்
Recommended Video
தேனி: ஆள்மாறாட்டம் செய்து தப்பிய விவகாரத்தில் கைதில் இருந்து தப்பிக்க திருப்பதியில் விஷ ஊசி போட்டு தற்கொலைக்கு முயன்றதாக உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் பகீர் வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த அரசு மருத்துவர் வெங்கடேசன். இவரது மகன் உதித் சூர்யா. இவர் தேனி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் அவர் மோசடி செய்தது உறுதியானது. இந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் தலைமறைவான உதித் சூர்யாவை போலீஸார் தேடி வந்தனர்.

தேனி
அவர் தனது குடும்பத்தினருடன் திருப்பதி மலையடிவாரத்தில் பதுங்கியிருந்தது தெரியவந்து அவர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் விசாரணைக்காக தேனிக்கு அழைத்து வரப்பட்டனர்.

தற்கொலை
அப்போது அவரது தந்தை வெங்கடேசனும் உதித்சூர்யாவும் ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக் கொண்டனர். மேலும் விசாரணையில் பகீர் தகவல்களையும் அளித்தனர். இதுகுறித்து தந்தை வெங்கடேசனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விஷ ஊசி போட்டு கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.

தேனி மாவட்ட சிறையில்
இதையடுத்து இருவரையும் தேனி நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சஸ்பெண்ட்
உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் பணியாற்றி வருகிறார். அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications