Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'வணக்கம் டா மாப்ள'.. தேனியில் தினகரன் ஜெயிக்காட்டி மீசையை எடுப்பேன்.. சபதம் எடுத்தவர்.. அன்று vs இன்று

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி தொகுதியில் டிடிவி தினகரன் தான் ஜெயிப்பார் என்று அன்று வீடியோ வெளியிட்ட 'வணக்கம் டா மாப்ள' புகழ் அருண்குமார், இன்று பெரியப்பா தங்க தமிழ்செல்வன் வெற்றி பெற்றுள்ளார் என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த இரண்டையும் திமுகவினர் ஒன்றாக்கி நேற்று இன்று என்ற பெயரில் ஷேர் செய்து வருகிறார்கள்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தேனி லோக்சபா தொகுதி என்பது பல ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டையாக இருக்கும் தொகுதியாகும். இங்கு கடைசியாக 1996ம் ஆண்டு தான். திமுக நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெற்றது . அதற்கு முன்பு 1980ல் மட்டுமே திமுக வென்றது.

Lok Sabha Election 2024 theni Lok Sabha Election result

இதனால் திமுக இந்த தொகுதியை எப்போதுமே கூட்டணிக்கு தந்துவிடும் வழக்கத்தை வைத்திருந்தது.. குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்குத்தான் தந்துவிடும்.. காங்கிரஸ் கட்சி தான் இங்கு 2004, 2009ம் ஆண்டு வெற்றி பெற்றது. 2014, 2019களில் நடந்த தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2019ல் எல்லா இடங்களிலும் வென்ற திமுக கூட்டணி தேனியில் மட்டும் தோற்றுப்போனதற்கு காரணம் அதிமுகவின் வலுவான வாக்கு வங்கி தான். இரட்டை இலையை பார்த்தால் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டு போடுவார்கள். வேட்பாளர் யார் என்று கூட பார்க்க மாட்டார்கள்.. எம்ஜிஆர் கட்சி, ஜெயலலிதா கட்சி என்று கூறி வாக்களிப்பார்கள்.

தேனி தொகுதியில் பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கம்பம், போடி, உசிலம்பட்டி, சோழவந்தான் என ஆறு தொகுதிகள் உள்ளன. இதில் பெரியகுளமும், சோழவந்தான் தொகுதியும் தனி தொகுதிகள் ஆகும் தேனி தொகுதியில் 1999ம் ஆண்டு நடந்த தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அப்போது ஏற்பட்ட நெருக்கத்தில் தான், பெரியகுளம் நகராட்சி தலைவராக இருந்த ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் மிகப்பெரிய உயரம் தொட்டார். முதல்வர் என்கிற அளவிற்கு ஓ பன்னீர்செல்வம் வளர்வதற்கு டிடிவி தினகரனும், சசிகலாவுமே முக்கிய காரணம் ஆகும்.

தேனி தொகுதியை பொறுத்தவரை தேனியில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. இதேபோல் ஓ பன்னீர்செல்வத்திற்கு போடி மற்றும் பெரியகுளம் பகுதியில் கணிசமான ஆதரவு உள்ளது. இந்நிலையில் தற்போது டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே கூட்டணியில் இருக்கிறார்கள். அதுவும் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் ஆதரவில் உள்ளதால் டிடிவி தினகரனுக்கு பிளஸ் ஆக பார்க்கப்பட்டது. டிடிவி தினகரன் கண்டிப்பாக ஜெயிப்பார் என்று பலரும் பேசினார்கள்.

இதனிடையே டிடிவி தினகரனை எதிர்த்து அவரது முன்னாள் சிஷ்யரான தங்கதமிழ் செல்வன் திமுக சார்பில் நிறுத்தப்பட்டார். திமுக இந்த முறை காங்கிரஸ்க்கு தராமல் தானே களமிறங்கியது. இதற்கு காரணம் டிடிவி தினகரனை வெற்றி பெற எந்த வகையிலும் விடக்கூடாது என்பதில் திமுக உறுதியாக இருந்தது. அதிமுக சார்பில் நாராயணசாமி நிறுத்தப்பட்டார்.

இந்நிலையில் தேனியில் பிரச்சாரத்தின் போது, அதிமுக வேட்பாளர் டிடிவி தினகரன் என்று நினைக்கும் அளவிற்கு நிலைமை இருந்தது. ஏனெனில் அவருமே ஜெயலலிதா எம்ஜிஆர் படங்களை போட்டுத்தான் வாக்கு கேட்டார். இது ஒருபுறம் எனில் 1999ல் டிடிவி தினகரன் எம்பியாக இருந்த காலக்கட்டத்தில் நிறைய செல்வாக்குடன் இருந்தவர் என்பதால், எப்படியும் வெல்வார் என்று பலரும் நம்பினார்கள். அப்படித்தான் தேனி தொகுதியில் டிடிவி தினகரன் தான் ஜெயிப்பார் என்று 'வணக்கம் டா மாப்ள' புகழ் அருண்குமார் வீடியோ வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், தேனி தொகுதியில் டிடிவி தினகரன் தான் ஜெயிப்பார். உறுதியாக என்னால் சொல்ல முடியும். பந்தயம் வேண்டுமானாலும் கட்டுகிறேன், மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்றார்..

இந்நிலையில் முடிவுகள் அப்படி வரவில்லை.. தங்க தமிழ்செல்வன் வெற்றி பெற்றார்.. தேனி தொகுதியில் தங்கதமிழ்செல்வன் 5 லட்சத்து 71 ஆயிரத்து 493 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டி.டி.வி.தினகரன் 2 லட்சத்து 92 ஆயிரத்து 668 வாக்குகள் பெற்று 2-வது இடம் பிடித்தார். டி.டி.வி.தினகரனை விடவும், 2 லட்சத்து 78 ஆயிரத்து 825 வாக்குகள் அதிகம் பெற்று தங்கதமிழ்செல்வன் அபார வெற்றி பெற்றார். 3-வது இடம் பிடித்த அ.தி.மு.க. வேட்பாளர் வி.டி.நாராயணசாமி 1 லட்சத்து 55 ஆயிரத்து 587 வாக்குகள் பெற்று டெபாசிட் தொகையையும் பறிகொடுத்தார்.

இந்நிலையில் இன்று வீடியோ வெளியிட்டுள்ள 'வணக்கம் டா மாப்ள' புகழ் அருண்குமார், தேனியில் பெரியப்பா தங்க தமிழ்செல்வன் ஐயா வெற்றி பெற்றது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.. சில பேர் வந்து என்னிடம் கருத்துக்கணிப்பில் அப்படி சொல்லியிருந்தீங்க என்று கேட்ருந்தீங்க.. மீசை காளியத்தா என்னை எடுக்க வைத்துவிட்டார்.. பழையபடி எடுக்க வேண்டும் என்றாலும் எடுக்கிறேன்.. என்னை சித்ரவதை செய்யாதீங்க.. எனக்கு தங்கதமிழ்செல்வன் ஐயாவும் வேண்டும்.. டிடிவி தினகரன் அண்ணனும் வேண்டும்.. இரண்டு பேருமே தேனிக்கு நல்லது செஞ்சவங்க... அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாங்கி தர வேண்டும் என்று தங்கதமிழ்செல்வன் ஐயாவிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.. இந்த வீடியோவை திமுகவினர் சமூக ஊடகங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+