Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாலிகிராமமே வர்றோம்.. விஜயகாந்த்தை பார்க்கணும்.. ஒரே டென்ஷன்.. பிரேமலதா "சொல்"லால் நிம்மதியான தேமுதிக

Subscribe to Oneindia Tamil

தேனி: விஜயகாந்த்தின் உடல்நிலையில் பின்னடைவு என்று செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்து தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் ஒன்றை தந்துள்ளார்.

விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன், நேற்றைய தினம், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.. பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

Vijayakanth Health and What did DMDK Premalatha say about Leader Vijayakanth

அப்பா எப்படி இருக்கிறார் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு விஜயபிரபாகரன், "கேப்டனின் உடல்நிலை பின்னடைவாக உள்ளது. ஆனால், அவர் 100 ஆண்டுகள் வாழும் அளவுக்கு நன்றாக இருப்பார்..

மந்திரம்: ஏற்கனவே இருந்ததைவிட, பேசவும், எழுந்து எழுந்து நின்று நடக்கவும் வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.. உங்களை போன்றே நாங்களும் அவர் நலமுடன் வருவார் என்று நம்பிக்கை வைத்திருக்கிறோம். இன்று வரை கேப்டன் நலமாகவே இருந்து வருகிறார். "முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தமானது" என்பதே விஜயகாந்தின் மந்திரம். எங்களின் தாரக மந்திரமாகவும் அதையே சொல்கிறோம்" என்று கூறியிருந்தார்.

உடல் பின்னடைவு: விஜயகாந்த் உடல் பின்னடைவு என்று விஜயபிரபாகரன் சொன்னதுமே, தேமுதிக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மக்களும் அதிர்ந்து போனார்கள்.. மிகுந்த கவலையும் கொண்டார்கள். அத்துடன் தேமுதிக தொண்டர்களிடையே ஒருவித பரபரப்பும், பதற்றமும் ஒட்டிக்கொண்டுவிட்டது. பழைய விஜயகாந்த் திரும்பி வர வேண்டும் என்று பலபேர் பிரார்த்தனைகளிலும் ஈடுபட தொடங்கிவிட்டனர்.

அதுமட்டுமல்லாமல், திரையுலகை சேர்ந்தவர்களும், விஜயகாந்த்தை சந்திக்க உடனே கிளம்பி வீட்டுக்கு வருவதாகவும், சிலர் சந்திக்க நேரம் வேண்டும் என்று கேட்டார்களாம். அதற்கு, கேப்டன் நன்றாக இருப்பதாகவும், யாரும் இப்போது பார்க்க வர வேண்டாம் என குடும்பத்தினர் கூறிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விஜயகாந்த்: இந்நிலையில், தேனியில் செய்தியாளர்களிடம் பிரேமலதா பேசியபோது, விஜயகாந்த் உடல்நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், "கேப்டன் எப்படி இருக்கிறார் என்று நான் போகிற இடங்களிலெல்லாம் கேட்கிறார்கள்.. விஜயகாந்த் நன்றாகவே இருக்கிறார். நம்மோடு நூறு ஆண்டு காலம் இருந்து வழிநடத்துவார்... எப்போதுமே எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம்.

நல்லவர்கள் வாழ்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, வீழ்ந்ததாக இருக்கக் கூடாது. கேப்டன் விஜயகாந்த்தை போன்ற நல்லவர்கள் வாழ வேண்டும். அதைப்பார்த்து ஒரு 100 பேர் மக்களுக்கு உதவி செய்வார்கள். தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாநாட்டை தேமுதிக நடத்த போகிறது.. அதற்கு நிச்சயம் விஜயகாந்த் வரப்போகிறார்.. விஜயகாந்த் மறு உருவமாக விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் இருவருமே இருக்கிறார்கள்... அதனால், தொண்டர்கள் எதற்கும் பயப்பட தேவையில்லை என்றார்.

பெருத்த நிம்மதி: பிரேமலதா தந்த இந்த விளக்கமும், நம்பிக்கையும், விஜயகாந்த்தை உயிருக்கு உயிராக நேசித்து கொண்டிருக்கும், லட்சக்கணக்கான மக்களுக்கு நிம்மதி உணர்வை தந்துவருகிறது. அத்துடன், விஜயகாந்த் பிறந்தநாள் நெருங்கி கொண்டிருப்பதால், அவரை நேரில் காணவும் தயாராகி கொண்டிருக்கிறார்கள்..!!!

ட்விட்: விஜயபிரபாகரன் பேட்டி பரபரப்பானதையடுத்து, உடனடியாக ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில், "கேப்டன் உடல்நிலை நன்றாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம்... வழக்கம் போல் ஊடகங்கள் தவறான தலைப்பில் சித்தரிக்கிறது... இணைப்பை திறந்து நான் பேசியதை பாருங்கள் அப்போது புரியும் நன்றி!!

கட்சியினர் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். வழக்கம் போல் ஆகஸ்ட் 25ஆம் தேதி கேப்டன் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் பிரமாண்டமாகக் கொண்டாடலாம்" என்று பதிவிட்டிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+