தேனி அரசு ஊழியர் முருகானந்தம்.. ஒரே நாளில் கோடீஸ்வரர், புது வீடு, உல்லாச சுற்றுலா.. சிக்கியது எப்படி?
தேனி: தேனி என்.ஆர்.டி. நகரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக உள்ள முருகானந்தம்(56) என்பவர், , தவறான கணக்கு காட்டி ரூ.1 கோடியே 16 லட்சம் கையாடல் செய்துள்ளார். அந்த பணத்தில் கோவிலுக்கு நன்கொடை வழங்கியதோடு, குடும்பத்தோடு சுற்றுலா சென்று செலவு செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
தேனி என்.ஆர்.டி. நகரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் அலுவலகம் இருக்கிறது. இந்த அலுவலகத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கழிவுநீர் அகற்றும் கோட்டத்தின் தலைமை அலுவலகத்தின் உத்தரவின்பேரில், ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரி வரதராஜன் கடந்த ஜூன் 6, ஆகஸ்ட் 5,செப்டம்பர் 24, 26ம் தேதிகளில் ஆய்வு செய்தார்.

அதில், அங்குள்ள குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய முருகானந்தம் என்பவர் (திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்தவர்) , தவறான கணக்கு காட்டி ரூ.1 கோடியே 16 லட்சம் கையாடல் செய்து இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து முருகானந்தம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் கருத்தப்பாண்டியன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத்திடம் புகார் செய்தார்.
அந்த புகாரின் பேரில் முருகானந்தம் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வந்தனர். முருகானந்தம் கடந்த 20-ந்தேதி தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து அவரை கடந்த 29-ந்தேதி 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அதன்பேரில் அவரை தேனி இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி தலைமையிலான போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையை தொடர்ந்து அவரை நேற்று ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இந்த விசாரணையின்போது கையாடல் செய்தது எப்படி? அந்த பணத்தை என்ன செய்தார்? என்பது குறித்து போலீசாரிடம் முருகானந்தம் தெரிவித்தார். அப்போது முருகானந்தம் கையாடல் செய்ததை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில், புதிய வீடு வாங்கியதாகவும், தனது குடும்பத்துக்கு ஆடம்பர செலவுகள் செய்ததாகவும், கோவில்களுக்கு நன்கொடைகள் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை ஒரு பஸ்சில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்துச் சென்று ஆடம்பர செலவுகள் செய்ததாகவும் அவர் வாக்குமூலத்தில் கூறினாராம். இந்த தகவலை போலீசார் தெரிவித்தனர்.
2019-ல் பெரியார் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் தட்டச்சராகப் பணியில் சேர்ந்த முருகானந்தம், பதவி உயர்வில் கண்காணிப்பாளராக இருந்து வந்தார் என்றும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மோசடி புகாரில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications