தேனியில் குளித்துவிட்டு தலையை காயவைக்க மாடிக்கு போன சஷ்மிதா.. எந்த பெற்றோரும் பார்க்கக் கூடாத கோலம்
தேனி: தேனி பழனிசெட்டிபட்டி வாசவி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன் என்பவர் மருந்தகம் வைத்து நடத்தி வருகிறார். அவருடைய மனைவி ரேணுகாதேவி. இவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர்களது இரண்டாவது மகள் சஷ்மிதா என்பவர் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் வீட்டில் குளித்துவிட்டு தலையை காய வைக்க மொட்டை மாடிக்கு சென்றார். அப்போதுதான் யாருமே எதிர்பார்க்காத சம்பவம் நடந்துள்ளது.
வீட்டின் மொட்டை மாடியில் நடந்து செல்லும் போது, அதுவும் காலில் ஈரத்துடன் நடந்து செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் காலில் உள்ள ஈரம் வழுக்கி தவறி விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல் மொட்டை மாடியில் வேடிக்கை பார்க்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு நொடி நிதானம் தவறினாலும் வாழ்க்கை முடிந்துவிடும். அதேபோல் மொட்டை மாடியில் உட்காரும் போதும், தள்ளி பாதுகாப்பாக உட்கார வேணடும். கவனக்குறைவாக இருந்தாலும், அடுத்த நொடி வாழ்க்கை நிச்சயமில்லாமல் போகும். தேனியில் அப்படி ஒருசம்பவம் நடந்துள்ளது.

தேனி பழனிசெட்டிபட்டி வாசவி குடியிருப்பு பகுதியை சேர்ந்த 48 வயதாகும் விவேகானந்தன் என்பவர் அந்த பகுதியில் மருந்தகம் வைத்து நடத்தி வருகிறார். அவருடைய மனைவி ரேணுகாதேவி. இவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உண்டு. மூத்த மகள் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 2-வது மகள் சஷ்மிதா (16) தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார்.
விவேகானந்தன் தினமும் காலையில் தனது மகளை தெருவின் எல்லையில் உள்ள மெயின்ரோடு வரை அழைத்துச் சென்று பள்ளி வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைப்பது வந்தார். அதுபோல், பள்ளி முடிந்து மாலை தனது மகள் திரும்பி வரும்போது மெயின்ரோட்டில் காத்திருந்து தனது மகளை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டுச் செல்வார். அதன்படி நேற்று முன்தினம் மாலையில் பள்ளி முடிந்து வந்த சஷ்மிதாவை மெயின்ரோட்டில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றார். மகளை வீட்டில் விட்டுவிட்டு அவர் மெடிக்கலுக்கு போய் விட்டார்.
நேற்று முன்தினம் இரவில், சஷ்மிதா தனது வீட்டில் குளித்துவிட்டு தலையை காய வைக்க மொட்டை மாடிக்கு சென்றுள்ளார. 2 மாடியை கொண்ட அந்த வீட்டின் மொட்டை மாடியின் ஓரத்தில் உள்ள தடுப்புச்சுவரில் அமர்ந்துள்ளார். அப்போது திடீரென கால் தடுமாறு அவர் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டார். அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், மாணவியை உடனே மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையறிந்து அவருடைய குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் விவேகானந்தன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications