தேனி அருகே வாழ்வில் இப்படியுமா நடக்கும்? முதலில் கணவர், அடுத்து தீபிகா.. நிர்கதியான குழந்தைகள்
தேனி: தேனி மாவட்டம் கம்பம் கோம்பை சாலைத்தெருவை சேர்ந்த மனோஜ் என்பவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி தீபிகா.. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நோயால் பாதிக்கப்பட்ட மனோஜ், அதில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்தார். அதற்காக அவர் எடுத்த முடிவு மொத்த ஊரையும் ஆடிப்போக வைத்துள்ளது. கணவனை தொடர்ந்து அவரது மனைவி தீபிகாவுக்கு நடந்த சம்பவமும் பலரையும் கலங்க வைத்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் கோம்பை சாலைத்தெருவை சேர்ந்த 32 வயதாகும் மனோஜ் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி தீபிகா (24). இந்த தம்பதிக்கு 7 வயதில் மகளும், 3 வயதில் மகனும் இருக்கிறார்கள். அண்மைக்காலமாக மனோஜ் கண்பார்வை குறைபாடு மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தாராம்.

இதற்காக மனோஜ் மருத்துவமனைக்கு சென்று அடிக்கடி சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் மனோஜ்க்கு நோய் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இந்த நோய் காரணமாக வேலைக்கு செல்லாமல் மனோஜ் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனிடையே மனோஜின் மனைவி தீபிகாவுக்கு வலிப்பு நோய் இருந்து வந்திருக்கிறது. இதனால் அடிக்கடி வலிப்பு நோயால் சிரமப்பட்டு வந்திருக்கிறார்.
வேலைக்கு போகாதததால் குடும்ப வறுமை ஒருபுறம், நோய் கொடுமை மறுபுறம் என நாளுக்கு நாள் பாதிப்பை சந்தித்து வந்த மனோஜ், மனம் உடைந்து போனதுடன், நேற்று முன்தினம் மாலை அரளிக்காய்களை தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். இதனையடுத்து மனோஜை, அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே மனோஜ் இறந்து விட்டதாக கூறினார்கள் இதனால் அவரது மனைவி தீபிகா அதிர்ச்சி அடைந்தார். கணவரின் இழப்பை தாங்க முடியாத அவர் மனவேதனையில் இருந்தார். அவரை பற்றியே நினைத்து கொண்டிருந்த தீபிகாவுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து தீபிகாவை மீட்ட அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தீபிகா பரிதாபமாக உயிரிழந்தார். கணவன் உயிரைவிட்ட ஒரே நாளில் மனைவியும் இறந்து போனது தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நோய் கொடுமையால் மனோஜ் உயிரைவிட்ட நிலையில். அவர் இறந்த அதிர்ச்சியில் தீபிகாவும் உயிரிழந்து விட்டதால், அவர்களது பிஞ்சு குழந்தைகள், தாய், தந்தை உயிரிழந்ததை கூட அறியாமல் நிர்கதியாக நிற்கின்றன. ஒரே நாளில் தாய் தந்தை இருவரையும் குழந்தைகள் பறிகொடுத்து அனாதையாக நிற்பது என்பது உலகில் மிகப்பெரிய கொடுமை என்பதால் உறவினர்கள் இதயத்தையே நொறுக்கியுள்ளது. பெற்றோரை இழந்த குழந்தைகள் உறவினர் ஒருவரின் பொறுப்பில் உள்ளனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications