தலையை விரித்து போட்டு வாசலில் அமர்ந்திருந்த பெண்.. சகுனம் பார்த்த சந்திரன்.. வாய்சண்டை.. தற்கொலை
இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய நபர் கைது செய்யப்பட்டார்
Recommended Video
தேனி: "கரெக்ட்டா நான் வெளியில கிளம்பும்போதுதான், இப்படி தலையை விரிச்சு போடுட்டு உட்கார்ந்திருப்பியா" என்று பக்கத்து வீட்டுக்காரரின் மனைவியை பார்த்து கேட்கவும், அந்த பெண் தூக்கிலேயே தொங்கிவிட்டார்.
தேனி மாவட்டம் சருத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதி சதீஷ்குமார் - கிருஷ்ணவேணி. இது ஒரு காதல் திருமணம்.. கிருஷ்ணவேணி சொந்தக்கார பெண்தான்.. இருந்தாலும் வீட்டில் எதிர்ப்பு இருந்ததால், அதையும் மீறி கல்யாணம் செய்து கொண்டார் சதீஷ்குமார். இவர் டிரைவர் வேலை பார்த்து வருகிறார். 2 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
தேனி ஓடை தெருவில் இவர்கள் இப்போது குடியிருக்கிறார்கள். ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் சந்திரனுக்கு இவர்களை பார்த்தாலே ஆகாது.. எப்ப பார்த்தாலும் எதையாவது சொல்லி சண்டைக்கு வந்துவிடுவார்.

சந்திரன்
இப்படித்தான் சம்பவத்தன்று கிருஷ்ணவேணி தன் வீட்டு வாசலில் உட்கார்ந்து தலையை வாரிக் கொண்டிருந்தார். பொதுவாக சந்திரன் எப்பவுமே சகுனம் பார்ப்பாராம்.. அந்த நேரம் பார்த்து சந்திரன் வீட்டிலிருந்து வெளியே வந்தார்.. கிருஷ்ணவேணியிடம், நான் வீட்டில் இருந்து கிளம்பி போற நேரத்துலதான், அபசகுணமா இப்படி தலையை விரிச்சு வெச்சுக்கிட்டு சீவணுமா.. நான் போற காரியம் விளங்குமா? என்று கேட்டுள்ளார்.

டென்ஷன்
"என் வீட்டு வாசப்படியில, என் தலையை, நான் சீவுனா உங்களுக்கென்ன" என்று கிருஷ்ணவேணி கேட்டுள்ளார். இதனால் டென்ஷன் ஆன சந்திரன், படக்கென ஆபாசமாக கிருஷ்ணவேணியை பேசிவிட்டார். இது இரு தரப்புக்கும் தகராறாக வெடித்தது.

கூச்சல்
கோபத்தின் உச்சிக்கு போய்விட்ட சந்திரன், கிருஷ்ணவேணியின் கையை பிடித்து தரதரவென இழுத்து போட்டு தாக்க ஆரம்பித்துவிட்டார். இதில் கிருஷ்வேணியின் வளையல் குத்தி கைகளில் ரத்தம் கொட்டியது. இந்த கூச்சல், சண்டையினால் அக்கம் பக்கம் வீட்டினர் திரண்டு வந்துவிட்டனர். சந்திரனை கடுமையாக எச்சரிக்க ஆரம்பித்ததும், அவர்களிடம் தாக்கு பிடிக்க முடியாமல் அங்கிருந்து விருட்டென கிளம்பி போய்விட்டார்.

கதறி அழுதார்
சந்திரன் அடித்ததில் கிருஷ்ணவேணிக்கு உடலில் காயம் ஏற்பட்டது. உடனே தன் கணவனுக்கு போனை போட்டு விஷயத்தை சொல்லி கதறி அழுதார். அதற்கு சதீஷ்குமார் "உடனே கிளம்பி வருகிறேன்.. நீ அழாம இரு" என்று தெரிவித்துள்ளார். ஆனால் சந்திரன் தன்னை அசிங்க அசிங்கமாக பேசியது, எல்லார் முன்னாடியும் தரதரவென இழுத்து போட்டு அடித்தது என இந்த அவமானம் தாங்காமல் கிருஷ்ணவேணி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் சொல்லப்பட, அவர்கள் விரைந்து வந்து சடலத்தை மீட்டு, தற்கொலைக்கு தூண்டியதாக சந்திரனை கைது செய்தனர். மூட நம்பிக்கைக்கு ஒரு அளவில்லையா என்றும், தான் வீட்டு வாசலில் தலை சீவிக் கொண்டிருந்த பெண்ணை ஒரு நபர் தாக்கியதாலும், அதனால் ஏற்பட்ட விபரீதத்தையும் நினைத்து அப்பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர்
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications