தகுதி நீக்க வழக்கால் பரபரப்பில் தமிழகம்.. ஆனால் குற்றாலத்தில் என்ன நடக்கிறது தெரியுமா?
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வர இருக்கும் நிலையில் எல்லோர் பார்வையும் குற்றாலம் பக்கம் திரும்பி உள்ளது.
Recommended Video

சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வர இருக்கும் நிலையில் எல்லோர் பார்வையும் குற்றாலம் பக்கம் திரும்பி உள்ளது.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் குற்றாலத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மன்னார்குடி ஆட்கள் அவர்கள் இருக்கும் ரெசார்ட்டிற்கு பாதுகாப்பிற்கு நிற்கிறார்கள்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. நீதிபதி சத்யநாராயணன் இன்று இந்த தீர்ப்பை வழங்க உள்ளார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

தங்கி கொண்டு இருக்கிறார்கள்
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பிற்காக தினகரன் தரப்பு எப்போதோ தயாராகிவிட்டது. இரண்டு நாட்களுக்கு முன் இந்த வழக்கில் இந்த வாரம் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டது. இதனால் தினகரன் உடனடியாக தனது ஆதரவு எம்எல்ஏக்களை குற்றாலத்தில் சென்று தங்க சொன்னார்.

என்ன நடக்கிறது
தமிழகமே தகுதி நீக்க வழக்கு காரணமாக பரபரப்பில் இருக்கிறது. ஆனால் அந்த பரபரப்பு எல்லாம் 18 எம்எல்ஏக்களின் 16 பேர் தங்கி இருக்கும் குற்றாலம் ரெசார்ட்டில் இல்லை. கடந்த இரண்டு நாட்களாக நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் எல்லோரும் ரெசார்ட்டில் எப்படி அமைதியாக குளித்து, சாப்பிட்டு ''வீக் எண்டை'' கொண்டாடுவது போல கொண்டாடினார்களோ அதேபோல் இன்றும் சாந்தமாக இருக்கிறார்கள். தீர்ப்பு இப்படித்தான் வரும் என்று அவர்களுக்கு முன்பே தெரியும் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில். அதனால் பெரிய பரபரப்பு இல்லையாம்.

மாற்றம்
இந்த தீர்ப்பு டிடிவி தினகரனுக்கு ஆதரவாக வரும்பட்சத்தில் 18 எம்எல்ஏக்களும் குற்றாலத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் கேரளாவில் உள்ள சில முக்கியஸ்தர்களின் ஹோட்டலில் பாதுகாப்பிற்காக தங்க வைக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

தயார்
அதேபோல் இவர்களை சென்னைக்கு கிளம்ப தயாராக இருக்கும்படியும் தினகரன் கூறியுள்ளதாக தகவல்கள் வருகிறது. முதல்வர் மீது நம்பிக்கை இல்லை அவரை மாற்ற வேண்டும் என்று இவர்கள் மீண்டும் மனு அளிக்க வாய்ப்புள்ளது. இவர்கள் உடனடியாக இப்படி மனு அளிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால், அவர்கள் இன்று இரவே கூட சென்னைக்கு கிளம்ப வாய்ப்புள்ளது.
-
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா?












Click it and Unblock the Notifications