நடுங்கிய நெல்லை.. பட்டப்பகலில்.. பல பேருக்கு முன்.. 18 வயது பெண் படுகொலை.. எப்படி நடந்தது?
திருநெல்வேலி: திருநெல்வேலியில் உள்ள டவுன் கீழ ரத வீதியில் இளம்பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பேன்சி ஸ்டோரில் வேலை செய்யும் சந்தியா(18) என்ற பெண் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
நெல்லை டவுன் கீழ ரத வீதியில் பேன்சி ஸ்டோரில் சந்தியா (18) வேலை செய்து வந்துள்ளார். வறுமையான குடும்பத்தை சேர்ந்த பெண் இவர்.

குடும்ப வறுமையை போக்குவதற்காக இவர் மேல்படிப்பு படிக்காமல் பணிக்கு சென்றுள்ளார். சொற்ப வருமானத்திற்கு இவர் வேலைக்கு சென்றாலும் பொறுப்பாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில்தான் சந்தியா என்ற அந்த இளம்பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவரை இளைஞர் ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த இளைஞர் தொடர்ந்து ஒரு தலையாக காதலித்து இந்த பெண்ணை தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அந்த பெண் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை.
மீண்டும் மீண்டும் அந்த இளைஞர் காதலை குறிப்பிட்டு அந்த பெண்ணை தொல்லை செய்ததாக நெருங்கிய உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அந்த பெண் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதை பற்றி உறவினர்கள் விசாரித்தும் கூட அந்த இளைஞர் விடாமல் அந்த பெண்ணை தொல்லை செய்து வந்துள்ளார்.
அந்த இளைஞரின் தொல்லை ஒரு பக்கம் எல்லை மீறி உள்ளது. ஆனாலும் அந்த பெண் வறுமை காரணமாக வேலையை விடாமல் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில்தான் அந்த பெண் எப்போதும் போல கடைக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் கடையில் இருந்து குடோனுக்கு பொருட்கள் எடுக்க சென்றபோது அவரை அந்த இளைஞர் துரத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடையில் இருந்து குடோனுக்கு செல்லும் போது நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் வழியாக அவர் சென்றுள்ளார்.
அப்போதுதான் இந்த வெறிச்செயல் நிகழ்ந்துள்ளது.. அங்கே பல நூறு பேர் இருந்துள்ளனர். பட்ட பகலில் பல வாகனங்கள் சென்று வந்துள்ளன. இவ்வளவு வாகனங்கள் சென்றும், ஆள் நடமாட்டம் அதிகம் இருந்தும் கூட அங்கே அந்த இளைஞர் கடுமையாக தாக்கப்பட்டு உள்ளார்.
பல நூறு பேருக்கு இடையே நடந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காதல் பிரச்சனை தான் இந்த கொலைக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணை தொடர்ந்து பின்தொடர்ந்து அந்த பெண் எங்கெல்லாம் செல்வார், என்னவெல்லாம் செய்வார் என்பதை கண்டுபிடித்து அவரை துரத்தி வெட்டி உள்ளார்.
கொலை செய்த இளைஞர் பைக்கில் வந்து பெரிய அரிவாளை வைத்து வெட்டியதாக கூறப்படுகிறது. நெல்லை டவுன் போலீசார் இளம்பெண் கொலை தொடர்பாக இங்கே வழக்கு பதிவு செய்துள்ளார். அங்கே இருக்கும் சிசிடிவி கேமராக்களை போலீசார் தற்போது தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். பட்டப்பகலில் பல மக்களுக்கு இடையே அவர் இந்த கொலையை செய்துள்ளார். இந்த கொலையை தடுக்க மக்கள் யாரும் வரவில்லை. மக்கள் அங்கே வந்து அந்த பெண்ணை காக்கும் முன் அந்த இளைஞர் பைக்கில் அங்கிருந்து எஸ்கேப் ஆனதாக கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications