சாலையோரம் இருந்த “மரணக் குழி”.. கார் கவிழ்ந்து விழுந்து தம்பதி பலி.. தென்காசி அருகே அதிர்ச்சி!
நெல்லை: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சாலையோரம் இருந்த ஓடைக்குள் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், காரில் இருந்த 2 பேர் பலியாகி உள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நெடுங்குளம் பிரிவு பகுதியில் திருநெல்வேலி நெடுஞ்சாலையில் தண்ணீர் நிரம்பிய குழியில் கார் விழுந்ததில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியர் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர்.

இந்த தம்பதியினர் பாளையங்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, சங்கரன் கோவில் அருகே நெடுங்குளம் விலக்கு பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் நிரம்பிய குழியில் கவிழ்ந்தது. இந்த தகவல் அறிந்து, தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
எனினும், காரில் இருந்த 2 பேரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்ட போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையோரம் இருந்த குட்டையில் கார் கவிழ்ந்து இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications