நெல்லையில் திமுக மேயருக்கு சிக்கல்? போர்க்கொடி தூக்கிய 40 கவுன்சிலர்கள்.. உதயநிதிக்கு கடிதம்
நெல்லை: நெல்லை திமுக மேயர் சரவணனுக்கு எதிராக அக்கட்சி கவுன்சிலர்கள் 40 பேர் போர்க்கொடி தூக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேயரை மாற்ற வேண்டும் எனக் கோரி கட்சி தலைமைக்கு கடிதமும் அனுப்பியதாக கூறப்படுகிறது.
நெல்லை மேயராக இருப்பவர் சரவணன். திமுகவை சேர்ந்த மேயர் சரவணனுக்கு எதிராக அக்கட்சியை சேர்ந்த 40 கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். நெல்லை மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் கவுன்சிலர்கள் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ளன. இந்த தகவலால் நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மேயருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் 40 க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களை நெல்லை மாநகராட்சியில் நிறைவேற்ற முடியாத சூழல் இருக்கிறது. இத்தகைய சூழலுக்கு மேயர்தான் காரணம். மேயரிடம் பல்வேறு கோப்புகள் நிலுவையில் இருக்கிறது.
கமிஷன் பெறாமல் மேயர் எந்த ஒரு கோப்புகளையும் நகர விடுவதில்லை என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் திமுகவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும். எனவே அத்தகைய சூழலை உருவாக்காமல் மேயரை மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அனைத்து திட்டங்களுக்கும் கமிஷன் எதிர்பார்த்து, மேயர் நிறுத்தி வைத்து இருப்பதாகவும் எனவே மாநகராட்சி அவப்பெயர் ஏற்படுத்தும், இது நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதால் கட்சி தலைமை இதில் தலையிட்டு மேயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருப்பதாக தெரிகிறது.
40 கவுன்சிலர்களும் கையெழுத்திட்டே இந்த கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ளார்களாம். இந்த விவகாரத்தில் கட்சி தலைமை என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாநகாரட்சி சரவணனுக்கு எதிராக ஆளும் கட்சி கவுன்சிலர்களே போர்க்கொடி தூக்கி இருப்பது நெல்லை மாநகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications