கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்.. உருளும் முக்கிய தலைகள்.. வெயிட்டிங் லிஸ்ட்டில் 6 அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: விசாரணைக்கு வந்த கைதிகளை கொடுமைப்படுத்தி அவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் 6 போலீஸ் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்து தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் பல்வீர் சிங், கடந்த 2019 ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வாகி இந்த பணிக்கு வந்திருக்கிறார். கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் மற்றும் விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட மூன்று காவல் நிலையங்கள் இவரது கட்டுப்பாட்டில் வருகின்றன. இந்நிலையில்தான் கடந்த 23ம் தேதி சுபாஷ் எனும் இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவருடன் மேலும் இவர் சேர்ந்து மற்றொருவரை தாக்கியதாக சொல்லப்படுகிறது.

சுபாஷை தொடர்ந்து இதில் தொடர்புடையதாக சொல்லப்படும் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டு கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ஏஎஸ்பி பல்வீர் சிங் இவர்களிடம் விசாரணை நடத்தியதாகவும், விசாரணையின்போது இவர்களின் பற்களை கட்டிங் பிளேடு கொண்டு பிடுங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் மருத்துவமனையில் கூறும்போது வாகனத்திலிருந்து கீழே விழுந்ததில் இவ்வாறு ஆனாதாக கூறியுள்ளனர்.

சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

பின்னர் அடுத்த சில விசாரணை கைதிகளும் இதேபோன்று பல் இல்லாமல் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக மீடியாக்களில் செய்தி வெளியான. பின்னர் மாநில மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்றது. விவகாரம் பெரியதாக வெடித்த நிலையில் அவரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்க்கட்சியினர் என பிரச்னை சூடு தனியாமல் மேலும் பற்றி எரிய தொடங்கியது. இதனையடுத்து பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பேனர்

பேனர்

இதற்கிடையில் ஓடைக்கரை துலுக்கப்பட்டியில் பல்வீர் சிங் தைரியமான மற்றும் நேர்மையான போலீஸ் அதிகாரி என்று பேனரும் வைக்கப்பட்டது. இதனையடுத்து இந்த விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளாானது. பின்னர் பல்வீர் சிங் கட்டுப்பாட்டில் இருந்த காவல் நிலையங்களில் மனித உரிமை ஆணையம் விசாரணையை தொடங்கியது. இதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இதுவரை சுமார் 10 பேருக்கும் அதிகமான விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதில் ஒருவர் மட்டும் தான் கொடுத்த பேட்டியை மறுத்து, தான் நெஜமாகவே கீழே விழுந்ததில்தான் பல் உடைந்துள்ளது என்று கூறினார்.

விசாரணை

விசாரணை

இருப்பினும் மனித உரிமைகள் ஆணையம் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டது. அதில் பல்வீர் சிங் கட்டுப்பாட்டில் இருந்த 3 காவல் நிலையங்களிலும் இந்த பல் பிடுங்கப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் கொடூரம் என்னவெனில் குடிபோதையில் குடும்ப தகறாரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நடுத்தர வயது நபரின் பற்கள் கூட பிடுங்கப்பட்டுள்ளன. வழக்கமாக கொடுரமான வழங்கில் சிக்கியவர்கள்தான் இப்படி தாக்கலுக்கு உள்ளாவார்கள். ஆக இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர்கள், தனிப்படை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் துணை போயுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, 6 காவல்துறை அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 காத்திருப்பு பட்டியல்

காத்திருப்பு பட்டியல்

அதாவது, அம்பாசமுத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன், கல்லிடைக்குறிச்சி காவல்நிலைய ஆய்வாளர் ராஜகுமாரி, விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளர் பெருமாள், திருநெல்வேலி தனிப்படை உதவி ஆய்வாளர் சக்தி நடராஜன், தனிப்படை காவலர்கள் மணிகண்டன் மற்றும் சந்தனக்குமார் என 6 அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+