Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னதான் ஆச்சு நம்ம “பீஸ்ட்” படத்துக்கு..? போலீசார் கொடுத்த ”ஷாக்” தகவல்.. நெல்லை ரசிகர்கள் சோகம்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி : நெல்லையில் நடிகர் விஜயின் பீஸ்ட் படம் ரிலீஸ் கொண்டாட்டங்களுக்கு போலீஸ் திடீர் தடை விதித்துள்ளதோடு, தடையை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை எச்சரித்துள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அமைந்துள்ளனர்.

Recommended Video

    என்னதான் ஆச்சு நம்ம “பீஸ்ட்” படத்துக்கு..? போலீசார் கொடுத்த ”ஷாக்” தகவல்.. நெல்லை ரசிகர்கள் சோகம்

    ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

    இந்தப் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது .

    கொண்டாட்டங்களுக்கு தடை

    கொண்டாட்டங்களுக்கு தடை

    எனவே ரிலீஸ் தேதி எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருந்த நிலையில் நாளை திட்டமிட்டபடி படம் வெளியாகிறது அந்தவகையில் நெல்லை மாவட்டத்தில் மாநகரில் மொத்தம் 6 திரையரங்குகளில் நாளை பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் நெல்லையில் திடீரென பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் கொண்டாட்டத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

    கடும் நடவடிக்கை

    கடும் நடவடிக்கை

    அதன்படி திரையரங்கிற்கு வெளியே வாகனங்கள் நிறுத்தவோ பேனர்கள் வைக்கவும் போலீசார் தடை விதித்துள்ளனர் மேலும் இன்னிசை கச்சேரி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி இல்லை என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர காவல்துறை சார்பில் அனைத்து திரையரங்குகள் முன்பு அறிவிப்பு பேனர் வைத்துள்ளனர்.

    போலீசார் எச்சரிக்கை

    போலீசார் எச்சரிக்கை

    கடந்த 2ம் தேதி பீஸ்ட் டிரைலர் வெளியான போது நெல்லை சந்திப்பு மதுரை சாலையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் டிரைலர் பார்த்த வேகத்தில் ரசிகர்கள் திரையரங்கின் இருக்கைகளை சேதப்படுத்தியும் கண்ணாடிகளை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டனர் இதன் எதிரொலியாகவே நெல்லை மாநகரில் நாளை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    பெரும் ஏமாற்றம்

    பெரும் ஏமாற்றம்

    சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது முந்தைய நாள் இரவே திரையரங்கில் ரசிகர்கள் கச்சேரி கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம் இதுபோன்று நிலையில் நெல்லை மாநகரில் பீஸ்ட் திரைப்பட ரிலீஸ் கொண்டாட்டங்களுக்கு போலீசார் விதித்துள்ள இந்த திடீர் தடையால் விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+