அருமை.. திருநெல்வேலி சீமைக்கும் வருகிறது "மெட்ரோ".. விரைவில் நடக்க போகும் ஆய்வுப்பணி.. சபாஷ் முடிவு
திருநெல்வேலி: சென்னையை தொடர்ந்து பல்வேறு இரண்டாம் கட்ட நகரங்களில் மெட்ரோ கொண்டு வரப்படுகிறது. அதன் ஒரு கட்டமாக திருநெல்வேலியிலும் மெட்ரோ கொண்டு வரப்பட உள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மெட்ரோ முதல் கட்ட போக்குவரத்து சிறப்பாக நடந்து வருகிறது. மாதாந்திர பயணிகள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1 கோடியை நெருங்கி வருகிறது. இந்த நிலையில்தான் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இரண்டாம் கட்ட மெட்ரோவிற்கு பின் சென்னை இந்தியாவில் மிகப்பெரிய மெட்ரோ சேவையாக இருக்க போகிறது.

சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகளுக்கான ஒப்பந்தங்கள் அடுத்தடுத்து கையெழுத்தாகி வருகின்றன. அடுத்தடுத்து 3 நிறுவனங்களுடன் இதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
அந்த வகையில் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2-ல் மாதவரம் பணிமனையில் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் அமைப்பதற்காக யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் நிறுவனத்திற்கு ரூ. 65.80 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் நிறுவனத்திற்கு 08.06.2023 அன்று வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட மெட்ரோ: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருநெல்வேலி: சென்னையை தொடர்ந்து பல்வேறு இரண்டாம் கட்ட நகரங்களில் மெட்ரோ கொண்டு வரப்படுகிறது. அதன் ஒரு கட்டமாக திருநெல்வேலியிலும் மெட்ரோ கொண்டு வரப்பட உள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எத்தனை கிலோ மீட்டர் மெட்ரோ, எங்கே அமைப்பது, எந்த ரூட் அமைப்பது உள்ளிட்ட எதுவும் இங்கே முடிவு செய்யப்படவில்லை. முதலில் இங்கே எத்தனை கிலோ மீட்டர் மெட்ரோ அமைப்பது என்று ஆய்வு செய்ய உள்ளனர். அதன்பின் மெட்ரோவிற்கான மற்ற திட்டங்களை ஆய்வு செய்ய உள்ளனர். இரண்டு கட்டமாக இந்த முடிவுகள் எடுக்கப்படும்.
திருச்சி, சேலத்தில் செய்யப்படும் ஆய்வுகள் முடிவிக்கப்பட்டு திருநெல்வேலியில் கொண்டு வரப்பட உள்ள மெட்ரோவிற்கான ஆய்வுகள் தொடங்கும் என்கிறார்கள் மெட்ரோ நிர்வாக வட்டாரத்தினர்.
திருச்சி சேலம்: மதுரை, கோவையில் மெட்ரோ வர இருக்கும் நிலையில் சேலம், திருச்சியிலும் மெட்ரோ அமைப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளன. அதற்கான பின்வரும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளன.
சேலத்தில் 40 கிமீ தொலைவிற்கு, திருச்சியில் 38 கிமீ தொலைவிற்கு மெட்ரோ அமைக்க உள்ளனர். 1.எந்தெந்த ரூட்டில் மெட்ரோ அமைக்கலாம். 2.சாலைக்கு மேலே அமைப்பதா சாலைக்கு உள்ளே அமைப்பதா? 3. இதற்காக இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள், பாலங்கள் எவை. 4.எந்தெந்த இடங்களை கண்டிப்பாக இணைக்க வேண்டும் 5. பணிகள் தொடங்கினால் போக்குவரத்தை எப்படி மாற்றுவது ஆகிய ஆலோசனை பணிகளை தொடங்கி உள்ளனர்.
மதுரை மெட்ரோ: மதுரை, கோவை மெட்ரோ தொடர்பான ஆலோசனைகள், சாத்தியக்கூறு சோதனைகள் நடந்து வருகின்றன. இதற்காக தமிழ்நாடு அரசிடம் அனுமதி பெற வேண்டும். பல்வேறு இடங்களில் கடைகளை அகற்றுவது தொடர்பாக மாநகராட்சி அனுமதியும் பெற வேண்டும். அதன்பின் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். இந்த இரண்டு மெட்ரோவிற்கான ரிப்போர்ட் முன்பே அளிக்கப்பட்டுவிட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications