அண்ணாமலையே ஆடிப்போயிட்டாரு.. "டேய் இங்கே வாடா".. ஆமா, டீக்கடையில் கன்னத்தை தடவி.. திருநெல்வேலி குஷி
திருநெல்வேலி: கட்சிக்கு தலைவராக இருந்தாலும்கூட, பழைய போலீஸ் பாசம் அண்ணாமலைக்கு இன்னும் விட்டு போகவில்லை போலும்.. என்ன நடந்தது தெரியுமா நெல்லை பாதயாத்திரையில்?
"என் மண் என் மக்கள் யாத்திரை"யில் அண்ணாமலை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.. அண்ணாமலை செல்லும் வழியெங்கும் மக்கள் கூட்டம் குவிகிறது.. கூடியிருந்த பொதுமக்களிடம் அண்ணாமலை சென்று பேசுகிறார்.. அவர்களிடம் நலம் விசாரிக்கிறார்..

வழி நெடுகிலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தவாறே உள்ளனர்.. வழிநெடுகிலும் சாலையோரம் திரண்டிருந்த பொதுமக்களை பார்த்து அண்ணாமலை உற்சாகமாக கையசைத்தும், கும்பிட்டவாறும் நடந்து செல்கிறார்.
விருதுநகர்: சில இடங்களில் எதிர்ப்புகளும் இருக்கத்தான் செய்கிறது.. இப்படித்தான், விருதுநகர் மாவட்டத்தில் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டிருந்தபோது, அங்கிருந்த மன்னர் பெரும்பிடுகு சிலைக்கு மாலை அணிவிக்க சென்றார். அப்போது முத்தரையர் சமூகத்தினர் திரண்டு வந்து, அண்ணாமலையை தடுத்து நிறுத்தினர்.
"திமுகவும் எங்களை புறக்கணிக்கிறது, பாஜகவும் புறக்கணிக்கிறது, பாஜக மூத்த தலைவர் அமித்ஷா ராமேசுவரத்துக்கு வந்தபோதும் எங்களை மதிக்கவில்லை.. அதனால், சிலைக்கு மாலை அணிவிக்க உங்களை உள்ளே விட மாட்டோம்" என்று சொல்லி, அண்ணாமலை நகர்ந்து செல்லாதவாறு, அரண்போல் தடுத்து சுற்றிலும் நின்று கொண்டார்கள்.
ஆனால், அண்ணாமலையோ, "அண்ணா.. வழியை விடுங்கண்ணா.. நான் உங்களுடன் பேச வரல.. விதண்டாவாதம் பண்ணாதீங்க.. நான் மன்னருக்கு மரியாதை செலுத்த வந்திருக்கிறேன்... நாங்க ஒன்னும் திராவிட கட்சிகளை போல கிடையாது.. இதை நீங்கள் உணர்ந்தால் என்னை உள்ளே விடுங்கள்" என்றதுமே, மொத்த எதிர்ப்பாளர்களும் விலகி அவருக்கு வழிவிட்டனர்.
மக்கள் வெள்ளம்: ஆயிரக்கணக்கான தொண்டர்களும், நிர்வாகிகளும், பாதுகாப்பு அதிகாரிகளும் துணையிருந்தாலும்கூட, தனக்கு ஏதாவது பிரச்சனை என்றால், தனிநபராகவே அவைகளை சமாளித்து நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இப்படித்தான் நேற்று நெல்லை மாவட்டத்தில் பாதயாத்திரை சென்றுகொண்டிருந்தார் அண்ணாமலை.. வழியெல்லாம் மக்கள் வெள்ளம் அவருக்கு திரண்டு வரவேற்பு தந்தன.. இரவு நேரம் என்றாலும், மாலைகளையும், பூக்களையும் அள்ளி அண்ணாமலை மீது தூவி வாழ்த்து சொன்னார்கள்.. அண்ணாமலையை நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காக, சிறுவர்களும் ஆர்வத்துடன் அப்போது வந்திருந்தனர்..
சிறுவன்: அண்ணாமலையை பார்த்துமே, ஆசை ஆசையாக கைகளை நீட்டவும், அண்ணாமலையும் அவர்களுக்கு கை குலுக்கி நலம் விசாரித்தார்.. அதில் ஒரு சிறுவன் தன்னுடைய கையில் தாமரை சின்ன அட்டையை ஏந்தியவாறு நின்றிருந்தான்.. ஒருகையில் அட்டையை வைத்துக் கொண்டு, இன்னொரு கையில், அண்ணாமலையிடம் கை கொடுக்க முயன்றான்.
அப்போது, அண்ணாமலை அந்த சிறுவனின் தலையை பார்த்ததுமே அதிர்ந்துவிட்டார்.. காரணம், அந்த சிறுவன், தலைமுடியை "ஸ்டைலாக" வெட்டியிருந்தான்.. உடனே அண்ணாமலை, "டேய் தம்பி.. என்னடா இது தலையில? இந்த கட்டிங் பேர் என்ன" என்று கண்டிப்புடன் கேட்டார்.. இதை கொஞ்சமும் எதிர்பாராத அந்த சிறுவன், "பாக்ஸ் கட்டிங் சார்" என்றான்.
அதற்கு அண்ணாமலை, "பாக்ஸ் கட்டிங்கா? படிக்கிற பிள்ளைகளுக்கு எப்பவுமே டிசிப்பிளின் முக்கியம்" என்று அறிவுரை சொன்னார். பிறகு அங்கிருந்து ஒரு டீக்கடைக்கு சென்று டீ குடித்தார்.. சிறிது நேரத்தில், அங்கிருந்த தொண்டர்களுடன் இணைந்து அண்ணாமலை அந்த கடையில் டீ குடித்தனர். சொந்த மாவட்டத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏவும் மூத்த தலைவருமான நயினார் நாகேந்திரனும் அண்ணாமலையுடன் டீக்கடைக்கு சென்றிருந்தார்..
வயதான தாத்தா: டீக்கடையில் நின்றிருந்தவர்களிடம் அண்ணாமலை நலம் விசாரித்தார்.. அந்த டீ கடையில் ஒரு வயதான தாத்தா வெற்று உடம்புடன் நின்று கொண்டிருந்தார். அண்ணாமலையை பார்த்ததுமே தாத்தா மிகவும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்.. அண்ணாமலையின் கைகளை இழுத்து பிடித்து, தன்னுடைய கண்களில் ஒற்றிக் கொண்டார்.
இதை பார்த்ததுமே அண்ணாமலையும் உணர்ச்சிவசப்பட்டு, அந்த தாத்தாவின் கன்னங்களை தடவி, பாசத்துடன் அவரது 2 கன்னங்களிலும் தட்டிக்கொடுத்து, ஒரு பெரிய வணக்கத்தை வைத்தார். இதெல்லாம் பார்த்து, நெல்லை மக்கள் அப்படியே பூரித்து போய்விட்டார்கள்..!!
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications