இதுதான் மாஞ்சோலை மக்களின் மனசு.. திருநெல்வேலி அரசு பேருந்தில் தமிழரசி செயலுக்கு குவியும் பாராட்டு
திருநெல்வேலி: குப்பைக்கூளமாக கிடந்த மாஞ்சோலை அரசு பஸ்சை சுத்தம் செய்த பெண் பயணியின் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பல நாட்களாக குப்பை கூளங்களுடன் பயணித்த அரசு பேருந்தில் சேர்ந்த குப்பைகளை காண பொறுக்காமல் , மாஞ்சோலையைச் சேர்ந்த தமிழரசி என்ற பயணி தனது வீடு போல நினைத்து சுத்தம் செய்தார். இதை கண்ட பயணிகள் பலரும் அவரை பாராட்டி வருகிறார். சமூக ஊடகங்களிலும் பலர தமிழரசியை பாராட்டி வருகிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மாஞ்சோலை எஸ்டேட். மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளை சிங்கம்பட்டி ஜமீனிடமிருந்து 99 ஆண்டுகள் குத்தகைக்கு வாங்கிய 'பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட்' என்ற நிறுவனம் அதனை மாஞ்சேலை எஸ்டேட் என்று பெயரிட்டு தேயிலை பயிர்களை பயிரிட்டு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் குத்தகை வரும் 2028-ஆம் ஆண்டுடன் நிறைவடைகிறது.

இருப்பினும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தேயிலைத் தோட்டப்பணிகளை நிறுத்தி அங்கே உள்ள பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளித்தது அந்த நிறுவனம்.நான்கு தலைமுறைகளாக வேலை செய்து வந்த மக்கள் மாஞ்சோலையைவிட்டு வெளியேறி வருகிறார்கள். கடந்த ஆகஸ்ட் தொடங்கி செப்டம்பர் மற்றும் அக்டோபர் என்று மூன்று மாதங்களில் வேலை நிமித்தமாக மக்கள் கணிசமாக வெளியேறிவிட்டனர். இப்போது ஓரளவே மக்கள் அங்கு இருக்கிறார்கள்.
மக்கள் பலர் வெளியேறிவிட்டார்கள் என்றாலும், மாஞ்சோலைக்கு இயக்கப்படும் அரசு பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. தற்போது ஒவ்வொரு நாளும் திருநெல்வேலியில் இருந்து ஒரு பேருந்து காலை மற்றும் மாலை என இரண்டு முறை மாஞ்சோலைக்கு வந்து செல்கிறது. அங்கு தேயிலை தோட்டப்பணிகள் நின்று போன நிலையில், அடிப்படை வசதிகள் சரியாக இல்லை.. சாலைகள் குண்டும் குழியுமாக மாறிவிட்டது.
தபால் நிலையம் மூடப்பட்டு விட்டது. தேயிலை தோட்டங்கள் செடிகள் பறிக்கப்படாததால் வளர்ந்து புதர்மண்டிப்போய் காணப்படுகின்றன. ஆனாலும் அங்கிருந்து கணிசமான மக்கள் வெளியேறவில்லை.. தாங்கள் பல தலைமுறையாக வாழ்ந்த மண்னை விட்டு போய் எங்கு வாழ்வது என்று தெரியாமல் தவிப்புடன் இருக்கிறார்கள். மேலும் தங்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை என்ற ஆதங்கத்துடன் இருக்கும் அவர்கள், தங்களை நிச்சயம் அரசு கவனிக்கும் என்ற நம்பிக்கையில் அங்கேயே வாழ்கிறார்கள்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் ஊத்து பகுதியில் இருந்து அம்பைக்கு அரசு பேருந்து வழக்கம்போல் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் நாலுமுக்கு, காக்காச்சியை கடந்து மாஞ்சோலைக்கு வந்தது. அந்த பஸ்சில் சில பயணிகள் பயணித்தனர். மாஞ்சோலையில் டீ குடிப்பதற்காக டிரைவர் பேருந்தை சிறிதுநேரம் நிறுத்தி இருந்தார். மாஞ்சோலையைச் சேர்ந்த பயணிகள் பஸ்சில் ஏறினர். அப்போது பஸ்சில் குப்பைக்கூளமாக கிடந்துள்ளது.
இதனைப் பார்த்த மாஞ்சோலையைச் சேர்ந்த தமிழரசி என்ற பெண் பயணி, பஸ்சில் இருந்த குப்பைகளை துடைப்பத்தை எடுத்து வந்து அகற்றி சுத்தம் செய்தார். தங்களை பல காலமாக பாதுகாத்து வந்து கொண்டிருக்கும் பஸ் குப்பைக்கூளமாக கிடந்ததை பார்க்க சகிக்காமல் தமிழரசி சுத்தம் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் காணொலியாக பரவியது. இவரை பலரும் பாராட்டி வருகிறார்கள். மாஞ்சோலை உள்பட எந்த மலைக்கு செல்பவர்களும் தயவு செய்து குப்பைகளை வீசாதீர்கள்.. அது மலையின் அழகை மட்டுமல்ல.. அங்குள்ள வனவிலங்குகளையும் அழித்துவிடும்..
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications