தேனி டூ திருநெல்வேலி.. அரிக்கொம்பன் யானையை இங்கு விடாதீங்க.. பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
திருநெல்வேலி: தேனியில் பிடிக்கப்பட்ட அரிக்கொம்பன் யானையை திருநெல்வேலி மாவட்ட வனப்பகுதிக்குள் விடுவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சின்னைக்கானல் மற்றும் சாந்தம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் "அரி கொம்பன்" என்று அழைக்கப்படும் காட்டு யானை வலம் வந்தது. அரி கொம்பன் காட்டு யானை ஊருக்குள் புகுந்து அங்குள்ள கிராம மக்கள் 8 பேரை கொன்றது. விளை நிலங்களையும் சேதப்படுத்தியது.

இதைத்தொடர்ந்து கேரள வனத்துறையினர் அந்த காட்டு யானையை மயக்க ஊசிகள் செலுத்தி பிடித்து, தமிழக-கேரள எல்லையில் உள்ள பெரியாறு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மேதக்கானம் என்ற வனப்பகுதியில் விட்டனர். அந்த யானையின் நடமாட்டத்தை கண்டறிய கழுத்தில் ரேடியோ காலர் எனப்படும் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி தொடர்ந்து கண்காணித்தனர்.
மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது: அரிகொம்பன் யானை கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மங்கல தேவி கண்ணகி கோவில் வழியாக தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தது. அப்போது தேனி மாவட்டம் மேகமலை, ஹைவேவிஸ் மலைப்பகுதியில் யானை தஞ்சம் அடைந்தது. அங்கு அடிக்கடி தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.
இந்த சூழலில் கடந்த மே மாதம் 27-ந்தேதி 'அரி கொம்பன்' காட்டு யானை கம்பம் நகருக்குள் வந்தது. நகருக்குள் யானை வீதி, வீதியாக ஓடியது. திடீரென யானை ஊருக்குள் புகுந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். கம்பம் நகர மக்களை கதிகலங்க வைத்த இந்த யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
இதற்கிடையே, தேனி மாவட்டம் ராயன்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சண்முகா நதி அணை பகுதியில் கடந்த சில தினங்களாக யானை முகாமிட்டு இருந்தது. அரிசி கொம்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்ததில் , அரி கொம்பன் யானையை அண்மையில் வனத்துறையினர் பிடித்தனர்.
2 மயக்க ஊசிகள் செலுத்தி அரிகொம்பன் யானையை வனத்துறையினர் பிடித்தனர். வனப்பகுதியில் இருந்து வந்து தனியார் ஒருவரின் தோட்டத்திற்குள் யானை நின்று கொண்டிருந்த போது வனத்துறையினர் யானையை பிடித்தனர். 3 கும்கி யானைகள் உதவியுடன் அரிக்கொம்பன் லாரியில் ஏற்பட்டது. சாலை மார்க்கமாக நெல்லை மாவட்டம் முத்துக்குளி பகுதிக்கு கொண்டு சென்றனர். இந்த முத்துக்குளி பகுதி அகத்திய மலை யானைகள் காப்பக பகுதியாகும். இங்கு வைத்து இரண்டு நாள் சிகிச்சைக்கு அளிக்கப்படும் என்றும் அதன் பிறகு அரிக்கொம்பன் யானை வனப்பகுதியில் கொண்டுவிடப்டும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் கொடூரமான செயல்களை செய்த அரிக்கொம்பன் யானையை நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில விடுவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் காணி பழங்குடியின மக்களும் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களும் மலை அடிவாரத்தில் உள்ள பொதுமக்களும் வனத்துறை சோதனை சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இதனால் அரிக்கொம்பன் நெல்லை வனப்பகுதியில் விடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications