பொங்கல் பரிசு 5000 ரூபாய்.. கேட்டால் செய்யக்கூடிய முதல்வர் ஸ்டாலின்.. திகைக்க வைத்த பாஜக
நெல்லை : இந்த ஆண்டு பொங்கலுக்கு ரூபாய் 5000 திமுக அரசு வழங்கும் என மக்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இந்த ஆண்டு உங்களுக்கு 5000 கொடுக்க வேண்டும் என எனது சார்பில் வலியுறுத்துகிறேன். கேட்டால் செய்யக்கூடிய முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர் .. என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வித்தியாசமான முறையில் விமர்சித்துள்ளார்.
நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், செங்கோட்டையன் 1977 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தவர். அமைச்சராக இருந்து பல்வேறு பணிகளை செய்து வந்தவர்.

அவர் அதிமுகவில் இருந்த காலகட்டத்தில் மிகப்பெரிய பதவிகளை பெற்றவர். எம்ஜிஆருக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. அதன் பின்னர் ஜெயலலிதா முதல்வராக இருந்தார்.
ஜெயலலிதா இறப்புக்குப் பின்னர் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வந்தார். அதிமுக எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சூழலில் கூட அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக இயங்கி வருகிறது.
செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். அதிமுகவிற்கான தனி வாக்கு வங்கி உள்ள கட்சி. அதில் யார் இருந்தாலும் அவர்களுக்கு அந்த வாக்கு வங்கி சேரும். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றால் அவர்களுக்கு அதிமுகவின் வாக்கு வங்கி செல்லுமா என்றால் அது கேள்விக்குறி. தேர்தலுக்கு பின்னால் தான், அவர்களது பலம் பலவீனத்தை சொல்ல முடியும். அதிமுக பாஜக கூட்டணிக்கு இன்று வரை எந்த பாதிப்பும் இல்லை மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது.
ஒவ்வொரு தலைவர்களுக்கும் கருத்து சொல்வதற்கு உரிமை உள்ளது. யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை எஜமானர்களான வாக்காளர்கள் தான் சொல்ல வேண்டும்.திமுக மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. 300 சதவீதம் சொத்துவரி உயர்வு மின்சார கட்டணம் 300 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது, இதனை பொதுமக்கள் மறந்துவிடக்கூடாது.
இந்த ஆண்டு பொங்கலுக்கு ரூபாய் 5000 திமுக அரசு வழங்கும் என மக்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இந்த ஆண்டு உங்களுக்கு 5000 கொடுக்க வேண்டும் என எனது சார்பில் வலியுறுத்துகிறேன். கேட்டால் செய்யக்கூடிய முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர். எல்லோருக்கும் ஐயாயிரம் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்து வருகிறார்கள் . முதலமைச்சர் ஐயாயிரத்தை கொடுப்பதற்கு தயாராக இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன்.
தேர்தலுக்காக தான் பொங்கலுக்கு 5000 கொடுக்க இருக்கிறார்கள் . பொதுமக்கள் ஐயாயிரத்தை வாங்கிக் கொண்டு வாக்களிப்பார்களா என்பது கேள்விக்குறிதான். மக்கள்தான் அதனை தீர்மானிக்க வேண்டும். மக்கள் தினம் தினம் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். மக்கள் மாதந்தோறும் ஒரு லட்சம் நஷ்டத்தில் இருக்கும்போது அவர்கள் 5000 வாங்கிக்கொண்டு எப்படி வாக்களிப்பார்கள். பாரதிய ஜனதா கட்சி யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை. அதிமுகவில் அவர்கள் இருக்கும் போது பாஜகவை நம்பி நாங்கள் இருந்தோம் என சொல்வதை எப்படி பொருத்தமாக இருக்கும். செங்கோட்டையன் ஏற்கனவே இது குறித்து விளக்கமாக சொல்லிவிட்டார்.
ஜனவரி 15 வரை நாள் உள்ளது அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மட்டுமல்ல அனைவரையும் ஒருங்கிணைக்கும் நாள் இருக்கிறது அவசரப்படாமல் இருங்கள். உலகத்தை ஆளக்கூடிய மிகப்பெரிய கட்சியை பாஜக.. அன்புக்குரிய தம்பி விஜய் இப்போதுதான் கட்சி ஆரம்பித்துள்ளார்.
எடுத்த உடனேயே லாங் ஜம்ப் ஹை ஜம்ப் என உலகத்தை தாண்டுவோம் என சொன்னால் எப்படி. ஒரு தேர்தலில் நின்று தனது செல்வாக்கை நிரூபித்துவிட்டு வெற்றி என்ற வார்த்தையை பயன்படுத்தினால் ஒத்துக் கொள்ளலாம். எம்ஜிஆர் வேறு.. விஜய் வேறு .. எம்ஜிஆரை வைத்து தான் அந்த காலத்தில் திமுக இருந்தது என்பதை மறக்கக்கூடாது.
எம்ஜிஆர் புரட்சித்தலைவராக வந்து கட்சியை தொடங்கினார்.. தம்பி விஜய் தற்போது நடிகராக தான் உள்ளார். செங்கோட்டையன் பின்னால் பாஜக இருந்தால் அவர் ஏன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்று இருக்க வேண்டும் .. அவர் அப்படி போக வேண்டிய அவசியமே இருந்திருக்காது.. அவர் எங்களுடன் இருந்திருக்கலாம். அதிமுக உள் கட்சி பிரச்சனையை நான் பேசினால் சரியாக இருக்காது. எங்களது கூட்டணி விவகாரம் குறித்து நாங்கள் பேச முடியும்.
மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் திமுகவை எதிர்த்து பேசினார். தற்போது திமுகவிலேயே ஐக்கியமாகிவிட்டார். தமிழகத்தில் மூன்றாவது அணி நான்காவது அணி என எது உருவானாலும் 2026 பாஜக அதிமுக கூட்டணி தான் ஆட்சியைப் பிடிக்கும். எங்களது கட்சியில் உள்ளவர்களை பற்றி மட்டுமே நான் கருத்து சொல்வேன் அடுத்த கட்சியை பற்றி எனது கருத்து இருக்காது " இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச்












Click it and Unblock the Notifications