நாங்குநேரி மாணவனுக்கு உடம்பில் வெட்டுப்படாத இடமே இல்லை! இவ்ளோ வெறிக்கு காரணம் தெரியுமா? கொடுமை
திருநெல்வேலி: ராகிங் கொடுமையை தாங்க முடியாமல் புகார் அளித்த பள்ளி மாணவர் ஒருவருக்கு தலை முதல் பாதம் வரை உடம்பில் வெட்டுப்படாத இடமே இல்லை.. அவ்வளவு கொடூரமாக சக மாணவர்கள் வெட்டி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றினை இப்போது பார்ப்போம்.
"தலை முதல் பாதம் வரை உடம்பில் வெட்டுப்படாத இடமே இல்லை..:" இரண்டு கைகளும் கால்களும் அறிவாள்களால் வெட்டி கிழிக்கப் பட்டுள்ளன.. சினிமாவில் வரும் "சைக்கோ' - போன்றவர்களால் தான் இது போன்றகொடூரத்தை செய்ய முடியும். நெல்லை மாவட்டம் நான்குநேரியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பட்டியலினத்தைச் சார்ந்த மாணவன் சின்னதுரையையும்.. அவனது தங்கையையும் இரவு 10 மணிக்கு வீட்டுக்குள் புகுந்து கொடூரமாக வெட்டி சாய்த்துள்ளது ஒரு சாதி வெறி பிடித்த சிறார் குழு.
தலை முதல் பாதம்வரைஉடம்பில் வெட்டுப்படாத இடமே இல்லை...
— கிருஷ் (@krish_itz) August 11, 2023
இரண்டு கைகளும் கால்களும்
அறிவாள்களால் வெட்டி கிழிக்கப் பட்டுள்ளன..
சினிமாவில் வரும் "சைக்கோ' - போன்றவர்களால் தான் இது போன்றகொடூரத்தை செய்ய முடியும்.
நெல்லை மாவட்டம் நான்குநேரியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.… pic.twitter.com/dc10CEFZvJ
படிப்பில்... விளையாட்டில்... ஒழுக்கத்தில்... திறமையில்... அப் பள்ளியில் முன்னுதாரணமாக விளங்கியுளான் சின்னத்துரை.
இவரைப் போல இருங்க என ஆசிரியர் பாராட்டியுள்ளார்.
இவனெல்லாம் நமக்கு மேலயா? பெருந்தெரு சாதிப் பய... !
எங்க பேக்க தூக்கிட்டு வா
பான்பராக் வாங்கிட்டு வா
பேனா , பேப்பர் வாங்கிட்டு வா...
மிரட்டல் அடி உதை என பல நாட்களாக .
டார்ச்சர் செய்து வந்துள்ளனர்.
அம்மா சத்துணவு பணியாளர்.
அப்பா வேறு மணம் செய்து பிரிந்து வாழ்கிறார்.
தாத்தா வீட்டில் தான் இவனும் அம்மா, தங்கையும் வசித்து வந்துள்ளனர்.
நமக்கு எதற்கு வம்பு...
இனி நான் ஸ்கூலுக்கு போகல என
அம்மா விடம் சொல்லி அழுதிருக்கிறான்
சின்னத்துரை.
அம்மா வும். தாத்தாவும் பள்ளிக்கு சென்று
புகார் அளித்திருக்கிறார்கள்.
எங்க மேலேயே கம்ளைன்ட் குடுப்பியா...
இங்க தான வாழனும் .
சின்னத்துரை யையும் வெட்டி விட்டு அருகில் படுத்திருந்த தங்கையையும்
வெட்டி சென்றுள்ளது .
சம்பவத்தை நேரில் பார்த்த பெரியவர் ஒருவர் அந்த இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார்.
காவல்துறை வழக்கு பதிந்து தனது கடமையை செய்துள்ளது.
பொதுச் சமூகம் எதுவும் நடக்காதது போல
கடந்து செல்கிறது.
இதற்கு மத்தியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்!" என்று ஸ்ரீராம் தனது பதிவில் கூறியுள்ளார்.
என்ன நடந்தது: நாங்குநேரி பெருந்தெரு அம்பிகா - முனியாண்டி ஆகியோரின் மகனான சின்னத்துரை வள்ளியூரில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சின்னத்துரைவுடன் நாங்குநேரியைச் சேர்ந்த சில மாணவர்களும் படிக்கிறார்கள். குறிப்பிட்ட சில மாணவர்கள் , அந்த மாணவரிடம் தங்களது புத்தகப் பைகளை சுமக்க வைப்பதும், கையில் காசு வைத்திருந்தால் பிடுங்கிக் கொள்வது தாங்கள் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும் தங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலையில் நடத்தி வந்தார்களாம். இதில் மாணவன் சின்னத்துரை கையில் வைத்திருக்கும் காசு மூலமாக அவர்களுக்கு பொருட்களை வாங்கி கொடுப்பதும், ஹோட்டல்களில் வாங்கி தின்றுவிட்டு அதற்கு சின்னதுரையை பணம் கொடுக்க சொல்வதும் நடந்து வந்ததாம்
தொடர்ந்து நடந்த ஒடுக்குமுறை காரணமாக சின்னதுரை பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் சின்னதுரையை தாயார் அம்பிகா ஏன் பள்ளிக்கூடம் செல்லவில்லை என்று கேட்டிருக்கிறார். அதற்கு சின்னதுரை, சக மானவர்கள் தன்னை அடிக்கிறார்கள், துன்புறுத்துகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். உடனே அம்பிகா தனது மகனை பள்ளிக்கு அழைத்து சென்று ஆசிரியரிடம் முறையிட்டு இருக்கிறார்; ஆசிரியரும் சின்னதுரையை துன்புறுத்திய குறிப்பிட்ட மாணவர்களை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளார்.
நடந்த எல்லாவற்றையும் கூறி ஆசிரியர் தங்களை எச்சரிக்கும் அளவுக்கு வந்துவிட்டதால், சின்னத்துரையை கொன்றுவிட வேண்டும் என என சில மாணவர்கள் வெறியுடன் சுற்றியுள்ளனர்.இதன்படியே சின்னதுரையின் வீட்டுக்குள் புகுந்து சின்னதுரையை சரமாரி வெட்டி இருக்கிறார்கள். தன் மீது விழும் வெட்டை தடுக்க கைகளைக் கொண்டு தடுக்க முற்பட்ட சின்னத்துரை முயன்றதால் தலையில் ஒரு வெட்டும், வலது கையில் மூன்று வெட்டு, இடது கையில் இரண்டு வெட்டு, தொடை, பாதம் என பல இடங்களில் பலமாக வெட்டி உள்ளார்கள். இதனை தடுக்க சென்ற சின்னதுரையின் சகோதரிக்கும் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க வந்த முதியவரை தள்ளிவிட்டு இருக்கிறார்கள் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் சக மாணவர்கள் 4 பேர், இடைநின்ற 2 மாணவர்க்ள் உள்பட கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 6 மாணவர்களிடமும் நாங்குநேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications