வேலைக்கு சேர்ந்தவுடனே ஒரு மாதம் சம்பளம்.. அக்கவுண்டில் ரூ.15000! மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு
நெல்லை: ஆகஸ்ட் 1 2025-க்கு பிறகு புதிதாக வேலைக்குச் சேரும் ஊழியர்களுக்கு, அவர்களின் ஒரு மாத ஊதியத் தொகை (அதிகபட்சம் ரூ.15,000 வரை) அரசாங்கத்தால் வழங்கப்படும் எனவும், இத்தொகை மூன்று தவணைகளாக ஊழியரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருங்கால வைப்பு நிதி (EPFO) மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி கழகம் (ESIC) ஆகியவற்றின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நலத்திட்டங்கள் குறித்த விளக்கக் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது.
இதில் திருநெல்வேலி மண்டல PF ஆணையாளர் சிவ சண்முகம் மற்றும் ESI இணை இயக்குனர் பாஸ்கரன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்து, தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான மிக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.

சம்பள உதவி
PF ஆணையாளர் சிவ சண்முகம் பேசும் போது," ஆகஸ்ட் 1, 2025-க்கு பிறகு புதிதாக வேலைக்குச் சேரும் ஊழியர்களுக்கு, அவர்களின் ஒரு மாத ஊதியத் தொகை (அதிகபட்சம் ரூ.15,000 வரை) அரசாங்கத்தால் வழங்கப்படும். இத்தொகை மூன்று தவணைகளாக ஊழியரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மேலும், இந்த இந்தத் திட்டத்தின் கீழ், உற்பத்தித் துறையில் (Manufacturing) உள்ள நிறுவனங்களுக்கு 4 ஆண்டுகளுக்கும், இதர துறை நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகளுக்கும் புதிய ஊழியர்களைச் சேர்ப்பதற்கான மானியம் வழங்கப்படும்.
மத்திய அரசு திட்டம்
பணியாளர் சேர்க்கை இயக்கம் 2025 மூலம், இதுவரை PF வரம்பிற்குள் வராத நிறுவனங்கள் அல்லது 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்தும் PF பிடிக்கத் தவறிய நிறுவனங்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில், விடுபட்ட ஊழியர்களையோ அல்லது நிறுவனத்தையோ இக்காலக்கட்டத்தில் பதிவு செய்தால், *அபராதம் மற்றும் வட்டி முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். பெயரளவில் வெறும் ரூ.100 மட்டுமே அபராதமாக வசூலிக்கப்படும். விடுபட்ட ஊழியர்களை மீண்டும் இணைக்க 'உமாங்' (UMANG) செயலி மூலம் முக அங்கீகாரம் (Face Authentication) செய்து எளிதாகச் சேர்க்கலாம். இதன் மூலம் ஊழியர்களுக்கு பென்ஷன் மற்றும் இன்சூரன்ஸ் பலன்கள் கிடைக்கும்.
பிஎப் தள்ளுபடி
சமூகப் பாதுகாப்பு, ஊதியம்,த் தொழில் உறவுகள் மற்றும் பணியிடப் பாதுகாப்பு ஆகிய நான்கு புதிய சட்டத் தொகுப்புகள் நவம்பர் 21, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம், கட்டாயப் பணி நியமன ஆணை (Appointment Order), மற்றும் மாதத்தின் 7-ம் தேதிக்குள் சம்பளம் வழங்குவது போன்றவை உறுதி செய்யப்படும்." என்றார்.
ஈஎஸ்ஐசி திட்டம்
தொடர்ந்து பேசிய ESI இணை இயக்குனர் பாஸ்கரன்," இதுவரை ESI-ல் பதிவு செய்யாத நிறுவனங்கள், எவ்வித அபராதமும், வட்டியும் இன்றித் தங்களைப் பதிவு செய்து கொள்வதற்கான அரிய வாய்ப்பு இது. டிசம்பர் 31-க்கு பிறகு பதிவு செய்யாத நிறுவனங்கள் கண்டறியப்பட்டால், பழைய பாக்கிகளுடன் சேர்த்து வட்டி மற்றும் அபராதம் வசூலிக்கப்படும். ஆபத்தான தொழில்கள் (Hazardous Industries) என்று வகைப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒரே ஒரு ஊழியர் வேலை செய்தாலும் கட்டாயம் ESI பதிவு செய்ய வேண்டும். மற்ற நிறுவனங்களில் 10-க்கு குறைவான ஊழியர்கள் இருந்தாலும், அவர்கள் விரும்பினால் தானாக முன்வந்து (Voluntary) ESI திட்டத்தில் இணையலாம்." என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications