தென்காசியில் அரசு வேலைக்கு ஆசைப்பட்ட இளைஞர்.. கடைசியில் இப்படியாக ஆகணும்

Subscribe to Oneindia Tamil

தென்காசி: அரசு வேலையில் சேர்த்துவடுவதாக யார் கூறினாலும் நம்பும் மக்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். எனக்கு அந்த அமைச்சரை தெரியும், இந்த அமைச்சரை தெரியும். அந்த அமைச்சரின் டிரைவர் என் மைத்துனர், இன்னொரு அமைச்சர் பிஏ எனக்கு உறவினர் என்று பொய்யை சொல்லி, நான்கு அமைச்சர்களுடன் புகைப்படத்தை மார்ப்பிங் செய்தோ அல்லது உண்மையாகவோ எடுத்து வைத்து , ஏமாற்றுவதை பிசினஸ் ஆகவே இன்று செய்கிறார்கள். அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பணத்தை தொலைக்கும் இளைஞர்கள் கடைசியில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்கள். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6½ லட்சம் மோசடி செய்த சென்னையை சேர்ந்தவர் கைதாகி உள்ளார்.

அரசு வேலையில் சேர்த்துவிடுவதாக கூறினால் யாரையும் மக்கள் எந்த காலத்திலும் நம்பவே கூடாது. அமைச்சர், ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயரை கூறினாலும் நம்பிவிடாதீர்கள். ஏனெனில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி தேர்வானால் தான் அரசு வேலை கிடைக்கும். ஒரு சில வேலைகளுக்கு நேரடி நேர்காணல் இருக்கிறது என்றாலும், அங்குமே கலெக்டரின் நேரடி முடிவின்படியே தேர்வு செய்யப்படுவார்கள். சிபாரிசு செய்து அரசு வேலை வாங்கித்தருவது என்பது சாத்தியமே இல்லை. எனவே இடைத்தரகர்களை நம்பிப் பணத்தை இழந்து வாழ்க்கையை சீரழித்துக் கொள்ளக்கூடாது. தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடந்த மோசடி பற்றி பார்ப்போம்.

Chennai man arrested in Tenkasi for Rs 6 50 lakh fraud involving promises of a government job

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கனகசபாபதிபேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதாகும் சுந்தர்ராஜ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் கடையநல்லூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவர் அரசு வேலையில் சேர முயற்சி செய்து வந்துள்ளார். இதனை அறிந்த கடையநல்லூர் அருகே உள்ள பால அருணாசலபுரம் பகுதியைச் சேர்ந்த மூக்கையா என்பவர் சுந்தர்ராஜை தொடர்பு கொண்டிருக்கிறார். அவருக்கு ஊரக வளர்ச்சித் துறையில் டிரைவர் அல்லது அலுவலக உதவியாளர் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறியிருக்கிறாராம்.

அரசு வேலை வாங்குவதற்காக சென்னையில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர்களிடம் பழக்கமுடைய சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த 57 வயதாகும் ரவிக்குமார் என்பவரை தெரியும் என்று கூறி சுந்தர்ராஜிற்கு அவரை அறிமுகப்படுத்தினார். வேலை கிடைக்க வேண்டும் என்றால் ரூ.6.5 லட்சம் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்களாம். அதனை உண்மை என்று நம்பிய சுந்தர்ராஜ் இருதவணையாக மொத்தம் ரூ.6.5 லட்சத்தை ரவிக்குமார், மூக்கையாவிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சுந்தர்ராஜை சென்னை மறைமலைநகரில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்தார்களாம். தொடர்ந்து 10 நாட்களில் பணி நியமன ஆணை வந்துவிடும் என்று கூறிவிட்டு சுந்தர்ராஜை ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் பல ஆண்டுகள் ஆகியும் அவருக்கு வேலை வழங்கவில்லையாம். வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் 2 பேரும் இழுத்தடித்தார்களாம்.

ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுந்தர்ராஜ் இதுதொடர்பாக கடையநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூக்கையாவை ஏற்கனவே கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் நேற்று முன்தினம் ரவிக்குமாரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரும் இதேபோல் மேலும் 4 பேரிடம் மொத்தம் ரூ.30 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+