‛அந்த மனசு தான் சார்’’.. வெள்ளத்துக்கு நடுவே ஸ்டாலினை நெகிழ வைத்த நெல்லை சிறுமி! ஆஹா.. செம
திருநெல்வேலி: வரலாறு காணாத மழை வெள்ளத்தால் தென் தமிழகம் தவித்து வரும் நிலையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சிறுமி ஒருவர் உண்டியலில் சேர்த்த நிதியை வழங்கியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் செயலுக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களில் இந்த மழை வேகமெடுத்தது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் சட்டென நிரம்பின. மட்டுமல்லாது அதிலிருந்து வெளியேறிய உபரிநீர் ஊருக்குள் பாய்ந்திருக்கிறது. எனவே இந்த மாவட்டங்களின் பெரும்பாலான கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டன.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் சுமார் 40 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தாமிரபரணி ஆற்றிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இன்று தூத்துக்குடியில் மழை இல்லை என்றாலும் சில இடங்களில் தேங்கி நின்ற வெள்ளம் இன்னும் வடியவில்லை. வெள்ளத்தில் சில வீடுகள் இடிந்து விழுந்திருக்கின்றன. பைக்குகள், கார்கள், பேருந்துகள் என அனைத்து வகை வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
நெல்லையில் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் #CMPRF-க்குக் கொடுத்த சிறுமி! நெகிழ்ந்தேன்; நெஞ்சம் நிறைந்தேன்!#மனிதம்காப்போம்! pic.twitter.com/lQfKWB9VZH
— M.K.Stalin (@mkstalin) December 21, 2023
இந்த மழை கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி குறித்து கேள்விகள் எழுந்திருந்தன. இது தொடர்பான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்திருக்கிறார். அதாவது நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவடத்தில் கடும் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட வட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அதேபோல தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ரூ.1000 நிவாரணம் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். மட்டுமல்லாது வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண தொகையையும் உயர்த்தி அறிவித்திருக்கிறார்.
அதாவது, "உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் ரூ. 4 லட்சம் நிதி உதவி ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். சேதம் அடைந்த குடிசைகளுக்காக ஏற்கனவே வழங்கப்பட்ட தொகை ரூ.5000. ஆனால் தற்போது இந்த தொகை ரூ. 10,000 ஆக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல மழையினால் 33 விழுக்காடு அல்லது அதற்கு மேலும் பாதிக்கப்பட்ட நெற்பயிர் இரவை பாசன பயிர்களுக்கு, ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 லிருந்து ரூ.17,000ஆக உயர்த்தி வழங்கப்படும். பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் 33 விழுக்காடு அல்லது அதற்கு மேலாக சேதமாகி இருப்பின் இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.18,000 வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இது ரூ.22,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மழையினால் பாதிக்கப்பட்ட மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.7,410 இதற்கு முன்பு இழப்பு இழப்பீடாக வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த தொகை ரூ.8,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். எருது பசு உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழப்புக்கு ரூ.33,000ஆக இருந்த நிவாரணத் தொகை ரூ.37,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். அதேபோல வெள்ளாடு, செம்மறியாடு உயிரிழப்புக்கு ரூ.3000 இழப்பீடாக வழங்கப்பட்டிருந்த நிலையில், அதை ரூ.4000 ஆக உயர்த்தி வழங்க உத்தர உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
முன்னதாக நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது சிறுமி ஒருவர் உண்டியலில் தான் சேர்த்து வைத்திருந்த சிறு தொகையை முதலமைச்சரிடம் நிவாரண நிதிக்காக கொடுத்துள்ளர். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். "நெல்லையில் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் CMPRF-க்குக் கொடுத்த சிறுமி! நெகிழ்ந்தேன்; நெஞ்சம் நிறைந்தேன்!" என x சோஷியல் மீடியா தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications