மாணவிக்கு சரமாரி அடி.. பிரம்பு முறிந்து.. பிளந்த துண்டு முத்தரசி கண்ணில் பாய்ந்து.. என்ன கொடுமை இது!
மாணவியின் பார்வை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது
நெல்லை: மாணவியை ஆசிரியர் அடித்த அடியில் அந்த பிரம்பு முறிந்து... பிய்ந்து கொண்டு போய்.. பக்கத்தில் உட்கார்ந்திருந்த இருந்த இன்னொரு மாணவி முத்தரசியின் கண்ணை துளைத்து சென்றது.. முத்தரசியின் கண்ணிர் ரத்தமாய் வழிந்தது.. இப்போது பார்வை பறி போகும் அபாயத்தில் உள்ளார்!
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்தவர் முத்துசெல்வன்... இவரது மகள் முத்தரசி... 10 வயது சிறுமி.. 5-ம் வகுப்பு படிக்கிறார்!
முத்துசெல்வன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், பாட்டி வீட்டில்தான் முத்தரசி தங்கி படித்து வருகிறார்... கூடங்குளத்தில் உள்ள புனித அன்னம்மாள் தொடக்கப்பள்ளி... இதுதான் முத்தரசியின் ஸ்கூல்... ஆதிநாராயணன் என்பவர் இவரது கிளாஸ் வாத்தியார்!

ஆதிநாராயணன்
சம்பவத்தன்று வழக்கம்போல ஸ்கூலுக்கு போனார் முத்தரசி.. ஆதிநாராயணன் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு மாணவியிடம் ஆதிநாராயணன் கேள்வி கேட்டார்... ஆனால் அந்த மாணவி பதில் சொல்லவில்லை.. அந்த பாடப்புத்தகத்தையும் வகுப்புக்கு கொண்டுவரவில்லை. இதனால் கோபடைந்த ஆதிநாராயணன் பிரம்பை எடுத்து அந்த மாணவியை அடித்துள்ளார்.

முத்தரசி
10 வயது பிஞ்சு என்றுகூட தெரியாமல் பிரம்புவால் விளாசி உள்ளார்... அந்த சமயத்தில் பிரம்பு முறிந்து பக்கத்தில் உட்கார்ந்த முத்தரசி கண்ணில் பட்டது. இதனால் முத்தரசி வலியால் அலறி துடித்தார்... கண்ணில் இருந்து ரத்தம் வந்துவிட்டது.. உடனடியாக பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் சொல்லப்பட்டது. அவர்கள் வந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.

ஆபரேஷன்
உடனடியாக முத்தரசியை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு அழைத்து சென்றனர்.. சிகிச்சையும் உடனடியாக தரப்பட்டது.. ஆனால், முத்தரசியின் பார்வைக்கு டாக்டர்கள் கியாரண்ட்டி தரவில்லை... பார்வை பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்கிறார்கள்.. எனினும், முதல் வேலையாக, முத்தரசிக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு, கண்ணில் சிக்கியிருந்த பிசிறு நீக்கப்பட்டு விட்டது.

கோரிக்கை
இந்த சம்பவம் தொடர்பாக சுயம்புகனி கூடங்குளம் போலீசில் முத்தரசியின் பாட்டி புகார் தந்தார்... விஷயம் கேள்விப்பட்டதும் முத்தரசியின் உறவினர்கள் ஸ்கூலுக்கு சென்று முற்றுகையில் ஈடுபட்டனர்... ஆசிரியர் ஆதிநாராயணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்... முத்தரசிக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். போலீசாரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்தனர்.

தலைமறைவு
ஆனால், ஆதிநாராயணன் இப்போது எஸ்.ஆகி உள்ளார்... தலைமறைவான அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்... நேற்று முன்தினம் துருதுருவென பள்ளிக்கு உற்சாகமாக சென்ற முத்தரசி, இன்று கண்ணில் கட்டு போட்டுக் கொண்டு வலியால் துடித்து வருவதை பார்க்கவே வேதனையாக உள்ளது!.. 2 நாள் கழித்து நிலைமை தெரிந்த பிறகு தேவைப்பட்டால் மேல்சிகிச்சைக்கு மதுரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்படுவார் என தெரிகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications