Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருநெல்வேலிக்கு சூப்பர் திட்டங்கள்.. சிப்காட், Y வடிவ ரயில்வே மேம்பாலம்! நெல்லையில் முதல்வர் அதிரடி

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: திருநெல்வேலியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அத்துடன் ஏராளமான திட்டங்களையும் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலி மாவட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தந்துள்ளார்...

tirunelveli sipcot nellai

திருநெல்வேலி: அந்தவகையில், நேற்றைய தினம் திருநெல்வேலி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.11.57 கோடியில், தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களை சீரமைத்து, மேம்படுத்தும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

வண்ணார்பேட்டையிலுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிய முதல்வர், அங்கிருந்து வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, திருச்செந்தூர் சாலை வழியாக பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் வரை 3 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று, ரோடு ஷோ நடத்தினார். அப்போது சாலையின் இரு பக்கமும் திரண்டு வந்த பக்தர்களுக்கு கை கொடுத்து மகிழ்ந்ததுடன் அவர்கள் தந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

2வது நாள்: இந்நிலையில், இன்று 2வது நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.. அதன்படி, காலை 8 மணிக்கு வண்ணார்பேட்டை விருந்தினர் மாளிகையில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுடன் உரையாடினார்.

தொடர்ந்து வண்ணார்பேட்டை முதல் பாளை. அரசு மருத்துவக் கல்லூரி மைதானம் வரை 5 கிமீ தூரம் ரோடு ஷோ செல்கிறார்.. அப்போது செல்லும் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்ற முதல்வர், தன்னை வரவேற்க நின்றிருந்த மாணவ, மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

ரெட்டியார்பெட்டி: பின்னர், இன்றைய விழாவில், ரூ.1060.76 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட தாமிரபரணி - நம்பியாறு- கருமேனியாறு நதிநீர் இணைப்பு திட்டம், ரெட்டியார்பட்டியில் ரூ.85.63 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 768 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட 24 முடிவுற்ற திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

வேளாண் மற்றும் உழவர் நலத் துறை சார்பில் கட்டப்பட்ட ரூ.77.02 கோடி மெகா உணவு பூங்காவை திறந்து வைத்தார். ரூ.180 கோடி மதிப்பிலான புறவழிச்சாலை திட்டத்தையும் ஸ்டாலின் துவக்கி வைத்தார். மேலும், முடிவுற்ற 23 திட்டப் பணிகளை துவக்கி வைத்தார். பாளையங்கோட்டையில் Y வடிவ ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்று உறுதி தந்துள்ளார்.

உதவிகள்: பின்னர் அவர், ரூ 77.02 கோடியில் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமைய உள்ள மெகா உணவு பூங்கா திட்டம் உள்ளிட்ட ரூ. 309.05 மதிப்பிலான 20 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் 75,151 பேருக்கு ரூ.167 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சிறப்பான அறிவிப்புகள் இவைகள்தான்:

முதல் அறிவிப்பு - புதிய சிப்காட்: திருநெல்வேலி மாவட்டத்தின் எதிர்கால தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நாங்குநேரி வட்டம், மறுகால்குறிச்சி மற்றும் திருவரமங்கைபுரம் கிராமங்களில், 2 ஆயிரத்து 291 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழில்பூங்கா அமைக்கப்படும். அதுமட்டுமல்ல, மூலக்கரைப்பட்டி பகுதியில் இருக்கும் ஆயிரத்து 200 ஏக்கர் தரிசு நிலங்களில் மேலும் ஒரு புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.

இரண்டாவது அறிவிப்பு - Y வடிவ ரயில்வே மேம்பாலம்:
திருநெல்வேலி மாநகரத்தில், மதுரை குமரி சாலையில், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் மற்றும் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் இடையே குலவணிகர் புரத்தில் இருக்கும் இரயில்வே கடவுப்பாதைக்கு மாற்றாக, புதிய Y வடிவ இரயில்வே மேம்பாலம் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.


மூன்றாவது அறிவிப்பு சுத்திகரிப்பு நிலையம்: திருநெல்வேலி மாநகராட்சியில், புதிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அதிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்சாலைகளுக்கும், மற்ற தொழில் பூங்காக்களுக்கும் பயன்படுத்த திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம், தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை முற்றிலும் தடுக்கவும் தொழிற்சாலை தேவைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்தவும்

நான்காவது அறிவிப்பு - 4வழிச்சாலை விரிவாக்கம்:
பாளையங்கோட்டை அம்பாசமுத்திரம் சாலை மேலப்பாளையம் பகுதியில், 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நெடுஞ்சாலைத்துறை மூலம் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்படும்.

ஐந்தாவது அறிவிப்பு உட்கட்டமைப்பு: அம்பாசமுத்திரம் வட்டம், அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

ஆறாவது அறிவிப்பு மதிப்பு கூட்டல் மையம்: - மீனவப் பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக திருநெல்வேலி மாவட்ட கடற்கரைப் பகுதியில், கடல்பொருட்கள் மதிப்புக் கூட்டல் மையம் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும். நான் இப்போது அறிவித்த திட்டங்களுக்கு எல்லாம், விரைவில் அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+