Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"முடிச்சுவிட்டீங்க போங்க".. 2 ரூபாய் கூடுதலா கேட்ட அரசு பஸ் கண்டக்டர்.. பயணி செய்த தரமான சம்பவம்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: நெல்லை - நாங்குநேரி இடையே அரசுப் பேருந்தில் பயணம் செய்த பயணிகளை சரியான இடத்தில் இறக்கி விடாமல் விட்டதோடு, கூடுதல் கட்டணம் வசூலித்த நடத்துநருக்கு ரூ. 12 அபராதம் விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. 2 ரூபாய் கூடுதல் கேட்டதற்காக 12 ஆயிரம் அபராதம் கொடுக்கச் செய்த பயணிகளின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அரசுப் பேருந்தாக இருந்தாலும் சரி, தனியார் பேருந்தாக இருந்தாலும் சரி டிக்கெட்டுக்கு காசை கொடுத்துவிட்டு மீதி சில்லறையை வாங்குவதற்குள் பயணிகள் படும் வேதனை இருக்கே சொல்லி மாளாது. ஒரு சில பேருந்து நடத்துனர்கள் டிக்கெட் கொடுக்கும்போதே, சில்லறையையும் கொடுத்து தெய்வமாக காட்சியளிப்பார்கள். சில கண்டக்டர்களோ 2 ரூபாய் சில்லறை கொடுப்பதற்குள் நம்மை சங்கடப்படுத்தி விடுவார்கள்.

conductor-has-been-fined-for-charging-extra-fares-from-passengers-on-a-government-bus-between-nellai

ஒவ்வொரு முறை அவர் நம் பகுதிக்கு வரும்போதெல்லாம் கொடுப்பாரா, மாட்டரா என்று மீதி சில்லறைக்காக அவரை நாம் பார்ப்பதும், நடத்துனர் கண்டுகொள்ளாமல் செல்லும் சம்பவத்தையும் நாம் பலரும் சந்தித்திருப்போம். ஒரு சிலர் ஸ்டாப்பிங் வரும் வரை நம்மை காக்கவைத்து கொடுப்பார்கள். சிலர் கூடுதலாக வசூலித்துவிட்டு குற்றவுணர்வே இல்லாமல் செல்லும் சம்பவமும் நிகழும். இது ஒரு பக்கம் என்றால் குறிப்பிட்ட நிறுத்தத்தில் இறக்கிவிடாமல், நட்டாற்றில் தவிக்க விடும் சம்பவங்களும் அசாதாரணமாக நிகழும்.

இதுபோன்ற ஒரு சம்பவம் தான் நெல்லை - நாங்குநேரியிலும் நடந்துள்ளது. ஆனால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பயணி செய்த சம்பவம் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. வாங்க என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

நாங்குநேரி, சன்னதி தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கண்ணன். நாங்குநேரி, காமராஜ் தெருவைச் சேர்ந்த கைலாசம் பார்வதிநாதன். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டில் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாங்குநேரி பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு அரசுப் பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது, இருவருக்கும் சேர்த்து 2 டிக்கெட்டுகளை 50 ரூபாய் செலுத்தி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், திடீரென நாங்குநேரி பைபாஸ் சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, பஸ் ஸ்டாண்டுக்குள் பேருந்து போகாது. நாகர்கோவிலுக்கு நேரடியாகச் செல்வதால் பைபாஸ் சாலையிலேயே இறங்குமாறு கூறியுள்ளார். இதுகுறித்து, கண்ணனும், கைலாசமும் நடத்துநரிடம் எதற்காக இங்கு இறக்குகிறீர்கள் என்று கேட்ட நிலையில் அவர் பதில் கூறி மறுத்துச் சென்றுள்ளார்.

இதையடுத்து, அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு இருவரும் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர். அந்த அலுவலகத்தில் பேசிய அதிகாரி நாங்குநேரி ஊருக்குள் சென்று பேருந்து நிலையத்தில் இருவரையும் இறக்கிவிட உத்தரவிட்டுள்ளார். பின்னர், நாங்குநேரி பேருந்து நிலையம் சென்று இருவரையும் இறக்கிவிட்டுள்ளனர்.

இதோடு மட்டுமல்லாமல், நாங்குநேரி பேருந்து நிலையத்துக்குச் செல்வதற்கான கட்டணம் ரூ. 23. ஆனால், அந்த பேருந்தின் நடத்துநர் 2 பேருக்கும் சேர்த்து 46 ரூபாயை வசூலிக்காமல், 50 ரூபாய் வசூலித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட கண்ணன், கைலசாம் இருவரும் வழக்கறிஞர் மூலமாக நெல்லை கன்ஸ்யூமர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கண்ணன், கைலாசத்துக்கு ஏற்பட்ட மன உளைச்சளுக்கு இழப்பீடாக 7 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், வழக்கு செலவுக்கு ரூ. 5 ஆயிரமும் என மொத்தம் ரூ. 12 ஆயிரம் அபராதம் விதித்து நடத்துநர் வழங்க வேண்டும் கூறி அதிரடி தீர்ப்பளித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+