மீண்டும் மீண்டும் தாக்குதல்.. நாங்குநேரி சின்னதுரைக்கு காங்கிரஸ் நிதியுதவி.. நேரில் ஆறுதல்
நெல்லை: கடந்த 2023ல் பள்ளியில் படிக்கும் சக மாணவரால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டதில் மாணவர் சின்னதுரை படுகாயமடைந்திருந்தார். வீடுபுகுந்து அவரை சகமாணவர்கள் வெட்டியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த தாக்குதலுக்கு பிறகு குணமான சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் கண்டனங்கள் குவிந்து வருகிறது. இதற்கிடையே தான் காங்கிரஸ் சார்பில் அவருக்கு நிதியுதவி என்பது வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் சின்னதுரை. கடந்த 2023ம் ஆண்டு வீடு புகுந்து அவர் மீது சக மாணவர்கள் அரிவாளால் வெட்டினர். இந்த கொடூர சம்பவம் கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் நடந்தது.

சின்னதுரை பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் வேறு ஜாதியை சேர்ந்த அவருடன் பயிலும் மாணவர்கள் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சின்னதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் சின்னதுரை மீண்டு வந்தார்.
7 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மாணவர் சின்னதுரை மீதான தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாணவரின் உயர்கல்வி செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். இந்த தாக்குதலுக்கு பிறகு அவர் வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆனாலும் சின்னதுரை தனது படிப்பை மட்டும் விட்டுவிடவில்லை. பிளஸ் 2 பொதுத்தேர்வில் 600க்கு 469 மதிப்பெண்களை பெற்றிருந்தார்.
தற்போது சின்னதுரை கல்லூரியில் படித்து வருகிறார். இப்படியான சூழலில் தான் இப்போது மீண்டும் சின்னதுரை மீது நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் வைத்து மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீண்டும் மீண்டும் அவர் மீதான தாக்குதலை பலரும் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் தான் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சின்னதுரையை காங்கிரஸ் கட்சியின் எஸ்சி பிரிவு மாநில தலைவர் ரஞ்சன் குமார் சந்தித்து பேசினார். அப்போது மாணவருக்கு அவர் ஆறுதல் கூறினார். அதுமட்டுமின்றி சம்பவம் பற்றி கேட்டறிந்தார்.
இந்த வேளையில், சின்னதுரை, ‛‛தன்மீது ஜாதிய ரீதியில் தாக்குதல் நடத்தப்படவில்லை. இன்ஸ்டாகிராம் நண்பர்கள் அழைத்ததால் அங்கு சென்றேன். அப்போது தாக்குதல் நடத்தப்பட்டது'' என்று கூறினார். இதை கேட்ட ரஞ்சன் குமார், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உதவுவதாக கூறினார். அதன்பிறகு சின்னதுரைக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications