அட.. ‘பி’ டீம் இல்லப்பா.. மெயினே திமுக தான் - சீமான் பொங்கிட்டாரு! ஒரே எதிர்க்கட்சி யாரு தெரியுமா?
நெல்லை : தி.மு.க பாரதிய ஜனதா கட்சியின் 'பி' டீம் அல்ல மெயின் டீமே அவர்கள்தான். தமிழகத்தின் ஒரே எதிர்க்கட்சியாக நாம் தமிழர் கட்சி தான் செயல்படுகிறது என சீமான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஓராண்டு திமுக ஆட்சியின் ஊழல் பட்டியல் குறித்து பேசும் அண்ணாமலை அதிமுகவின் பத்தாண்டு கால ஊழல் குறித்து கேள்வி கேட்பாரா என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
8 ஆண்டு பாஜக ஆட்சியில் ஊழலே இல்லை எனச் சொல்பவர்கள் ரஃபேல் போர் விமான விவகாரத்தில் 400 கோடி ஊழல் குறித்து வாய்திறக்கவில்லை என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரிவினை ஏற்படுத்தும் பாஜக
நாம் தமிழர் கட்சி சார்பில் பாவலேறு பெருஞ்சித்தனார் நினைவு தினம் நெல்லையில் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்விற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "நாட்டின் இறையாண்மை குறித்துப் பேசிவிட்டு நாட்டை துண்டாடும் செயலை ஆர்.எஸ்.எஸ், பாஜக செய்கிறது. நாட்டின் குடிமக்கள் மீது வெறுப்பை வைத்துக்கொண்டு இறையான்மை குறித்து பேசுகிறார்கள். இந்து கோட்பாட்டாளர்களுக்கும் சிவனுக்கும் சம்பந்தமில்லை. மத மோதல்களைத் தூண்டி நாட்டை பிரிவனை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது.

இலங்கை
சர்வதேச அரங்கில் இந்தியாவின் கடன் 90 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. 7,000 கோடி ருபாயை இந்தியா இலங்கைக்கு கொடுப்பதால் என்ன பயன்? இலங்கையின் சிங்களர்கள் இந்தியாவிற்கு விசுவாசமாக இருப்பார்களா? சீனா தனது ஒரு மாகாணமாக இலங்கையை மாற்றிவிட்டது. இலங்கையில் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகையில் கூட சீன எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

கச்சத்தீவு
18 ஆண்டுகள் தொடர்ச்சியாக மத்திய அமைச்சரவையில் இருந்த திமுகவிற்கு கச்சத்தீவை மீட்க நேரம் கிடைக்கவில்லை. இலங்கையை விட மோசமான நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுகொண்டிருக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் அதனை மறைக்க நினைக்கிறார்கள். சாதனை விளக்க பொதுக்கூட்டம் என்பது எதற்கு? அரசின் செயல் மக்களை சென்றடையும்போது சாதனை விளக்க பொதுக்கூட்டம் தேவையற்றது. மத்திய அரசின் 8 ஆண்டுகாலமும் தமிழக அரசின் ஓராண்டு காலமும் சாதனையல்ல வேதனையும் சோதனையும்தான்.

அண்ணாமலை
ஓராண்டு திமுக ஆட்சியின் ஊழலை கேள்வி கேட்கும் அண்ணாமலை அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியின் ஊழல் குறித்து கேட்கவில்லை. 2024 தேர்தலில் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுடன் கூட்டணி அமைக்காமல் இருப்பார்களா? 8 ஆண்டு மத்திய அரசு ஆட்சியில் ஊழலே இல்லை என செய்யவில்லை என சொல்பவர்கள் ரஃபேல் போர் விமான விவகாரத்தில் 400 கோடி ஊழல் குறித்து வாய்திறக்கவில்லை. நீதிமன்றம் ரபேல் குறித்து கேள்வி கேட்டதற்கு பதிலும் அளிக்கவில்லை. பாஜக ஆளும் 20 மாநிலங்களில் ஊழல் நடைபெறாமலா இருக்கிறது?

பி டீம் அல்ல
திமுக பாஜகவின் 'பி' டீம் அல்ல அவர்கள் தான் மெயின் டீம். தமிழகத்தின் ஒரே எதிர்க்கட்சியாக நாம் தமிழர் கட்சி தான் செயல்படுகிறது. 2024 ல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்கள் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள். அதுவும் கிடைத்தால் 10% ஆக வாக்கு வங்கி உயரும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications