"அதை விடுங்க, கேஸ் விலை குறைப்பீங்களா".. பேசிட்டிருக்கும்போதே மடக்கிய பெண்.. உதயநிதி பதிலை பாருங்க
: எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்
நெல்லை: உதயநிதி ஸ்டாலின் நெல்லையில் இன்று பிரச்சாரம் செய்தார்.. அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு சவாலையும் விடுத்து சென்றுள்ளார்.
தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. இந்த முறையும் திமுக கூட்டணி வைத்து போட்டியிடுகிறது.. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.
ஆனால், முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பிரச்சாரம் செய்யவில்லை.. இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து விடாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நயினார் நாகேந்திரன்
அந்த வகையில் நெல்லையில் பிரச்சாரம் செய்ய வந்தார்.. கடந்த முறைதேர்தலில் திமுக இங்கு தோல்வியை தழுவிவிட்டது.. பாஜகவின் நயினார் நாகேந்திரன் இங்கு வெற்றி பெற்றுள்ளார்.. இந்த தேர்தலில் மாநகராட்சியில் 55 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடுகிறது... திமுக 48 வார்டுகளிலும் காங்கிரஸ் 3 வார்டுகளிலும் மற்ற கூட்டணி கட்சிகள் 5 வார்டுகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர்... இவர்களை ஆதரித்து நெல்லை டவுன் வாகையடி முனை பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார் உதயநிதி.

எழுச்சி
அப்போது பேசிய உதயநிதி, "இந்த நெல்லை தொகுதியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஏமாற்றியதை போன்று மறுபடியும் ஏமாற்ற மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.. மக்களின் தற்போதைய எழுச்சியை பார்க்கும்போது தேர்தல் பிரச்சாரமே தேவையில்லை, வெற்றி உறுதி என்றே நினைக்கிறேன். தமிழகத்திலும் சட்டப்பேரவை முடக்கப்படும் என்று எடப்பாடிபழனிசாமி சொல்லி வருகிறார்.. பாஜக ஆட்சி இருக்கும் தைரியத்தில் இப்படியெல்லாம் அவர் பேசுகிறார்.

1000 ரூபாய்
சட்டமன்ற தேர்தலில் நாங்கள் உறுதியளித்தப்படி குடும்ப பெண்களுக்கான மாதம் ரூ.1000 நிதி விரைவில் வழங்கப்படும்.,, நாங்குநேரி, களக்காடு, வள்ளியூர், திசையன்விளை,மூலைக்கரைப்பட்டி, ஏர்வாடி, பணகுடி பேரூராட்சிகளைச்சேர்ந்த அனைத்து கிராமங்களுக்கும், தாமிரபரணி தண்ணீர் கிடைக்க ரூ.275கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. வள்ளியூர் அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக மாற்றப்படும். திசையன்விளை, பணகுடி பகுதிகளில் மனோ கல்லூரி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது . பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, மகளிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர்
முடிந்தால் சட்டப்பேரவையை முடக்கி பாருங்களேன்.. அப்படி முடக்கப்பட்டால் மறுபடியும் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும்,.. தைரியம் இருந்தால் முடக்கி பார்க்கட்டும்.. பாஜக அதிமுக கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக திமுக விளங்கி வருகிறது.. இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்வர்களில் முதல் இடத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார்.. ஆட்சி அமைத்து 9 மாதம் ஆகிறது.. இதில் 3 மாதங்கள் வரை கொரோனா தொற்றால் முடிந்து விட்டது..

உதயநிதி
அதிமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி கஜானாவை காலி செய்து விட்டு சென்ற நிலையிலும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று சொன்னதை செய்து காட்டியவர் முதல்வர்" என்றார். உதயநிதி இவ்வாறு பேசி கொண்டிருக்கும்போதே திடீரென ஒரு பெண் எழுந்து, "சமையல் கேஸ் சிலிண்டர் விலையை எப்போ குறைப்பீங்க" என்று கேட்டார்..

பெண்கள் கேள்வி
அதற்கு உதயநிதி, 8 மாதத்தில் படிப்படியாக சொன்ன திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.. தேர்தல் பிரச்சாரத்தில் அன்று சொன்னதை போலவே, சிலிண்டர் விலை, டீசல் விலை உள்ளிட்டவை குறைக்கப்படும்.. என்றார்.. சமீப காலமாக, உதயநிதி கலந்து கொள்ளும் பிரச்சார பொது கூட்டங்களில், இது போன்று பெண்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
-
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
நெல்லை 'பியூட்டி பார்லில் தப்பான வேலை'.. பணம் கறந்த காவலர்கள்.. பின்னாடியே நடந்த ட்விஸ்ட் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்











Click it and Unblock the Notifications