28 ஆண்டுகளுக்கு பிறகு தென்காசியில்.. வெற்றிக் கனியை சுவைக்க தயாராகும் திமுக!
தென்காசி: தென்காசி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். இதனால் இங்கு 28 ஆண்டுகளுக்கு பிறகு போட்டியிட்ட திமுக சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியதுதான் தென்காசி எம்பி தொகுதி ஆகும்.
காங்கிரஸின் கோட்டை என சொல்லப்படும் தென்காசி தொகுதியில் திமுக கடந்த 1991-ஆம் ஆண்டு போட்டியிட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தோல்வி கண்டது திமுக. அதைத் தொடர்ந்து அந்த தொகுதியில் திமுக போட்டியிட்டதே கிடையாது. மாறாக அந்த தொகுதியை கூட்டணி கட்சிக்கு வழங்கிவிடும்.

நேரடி களம்
இந்த நிலையில் 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக தலைவரான ஸ்டாலின் 28 ஆண்டுகளுக்கு பிறகு தென்காசியில் நேரடியாக களம் காண்பது என முடிவு செய்தார். அதன்படி அந்த தொகுதியில் நேரடியாக போட்டியிட தனுஷ் குமாரை என்ற திமுக வேட்பாளரை அறிவித்தார்.

புதிய தமிழகம் சார்பில்
அது போல் அதிமுக சார்பில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கிருஷ்ணசாமி போட்டியிட்டார். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியை விட திமுக வேட்பாளர் தனுஷ் எம் குமார் முன்னிலை வகித்து வருகிறார்.

தொண்டர்கள் எதிர்பார்ப்பு
தென்காசி தொகுதியில் திமுக வெற்றி பெற வேண்டும் என தொண்டர்கள் உற்சாகத்துடன் தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த தொகுதியில் வெற்றியை ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தொண்டர்கள் கடுமையாக உழைத்தனர்.

28 ஆண்டுகளுக்கு பிறகு
28 ஆண்டுகளுக்கு பிறகு போட்டியிட்டு முதல் முறையாக திமுக வெற்றி என்ற சாதனையை திமுக படைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தென்காசி யாருக்கு என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications