"என் மூத்த மகன் விஜய்".. நடிகர் விஜய்யை சொந்த பிள்ளையாக நினைத்து வாழும் நெல்லை மூதாட்டி பேட்டி

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: நடிகர் விஜய் தான் என் மூத்த மகன், என்றைக்கு விஜய் நடிப்பதை பார்த்தேனோ, அப்போது தான் அவரை நான் என் மகனாகவே நினைக்கிறேன் என்று திருநெல்வேலி மூதாட்டி ஒருவர் பேட்டியில் கூறினார். தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சி தலைவரும், நடிகருமான விஜய் குறித்து தன் சொந்த பிள்ளையாக நினைத்து வாழும் மூதாட்டி யார், அவர் எந்த ஊர் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்ததுடன், முதல் மாநாட்டை கடந்த அக்டோபர் 27ம் தேதி நடத்தினார்.அந்த மாநாட்டில் பல லட்சம் ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அதன்பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டத்தை சென்னை பனையூரில் நடத்தினார். இதில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக தமிழக வெற்றிக்கழக கட்சியினரும், நடிகர் விஜய்க்கு எதிராக நாதக ஆதரவாளர்களும், திமுகவினரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

vijay tirunelveli

இந்த சூழலில் திருநெல்வேலி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் நடிகர் விஜய் தான் தனது மூத்த மகன் என்று நினைத்து வாழ்கிறார். இதுபற்றி அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "நான் என்றைக்கு இளம் வயதில் விஜய் நடித்த படத்தை பார்த்தேனோ, அன்று முதல் அவரை என் மகனாக பார்க்கிறேன்.. எனக்கு இரண்டு மகன்கள்.. அதில் ஒருவர் விஜய்.. விஜய்யை நான் சந்தனம் மாதிரி என்று சொல்வேன்.. அவரை நேரில் பார்க்க முடியாத வருத்தம் எனக்கு இருக்கிறது..

திரையில் பார்க்கிறோம் என்றாலும், நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக உள்ளது. விஜய்யை யாராவது தவறாக பேசினால்,. அவர்களிடம் நான் என் மகன் ஜெயித்துவிடுவான் பாருங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து வந்துவிடுவேன்.. எனது மகன் என்று நினைப்பதால், அவரை அவன் இவன் என்று என்று தான் பேசுகிறேன். பிள்ளை என்று நினைத்த பிறகு, அவரு, இவரு என்று உங்களை போல் எனக்கு பேசவரவில்லை.. என்னை மன்னித்துவிடுங்கள்..

பிரியமானவளே படத்தில் நடிகை சிம்ரன் விஜய்யை விட்டு போய்விடுவார்.. அப்போது சங்கீதாவும் அமெரிக்கா போயிருப்பார். அப்போது பேப்பரில் பார்க்கும் போது, இப்படி போய்விட்டாரே..அம்மா, அப்பாவிடம் எத்தனை நாள் சாப்பிட முடியும்.. இதனிடையே விஜய் வடபழனியில் அப்போது வீடு வாங்கிய உடன் இருவரும் சேர்ந்தார்கள். அவர்களுக்கு திவ்யா பிறப்பார் என்று பார்த்தேன். ஆனால் சஞ்சய் பிறந்தார்.. நடிகர் விஜய் கூட இதுபற்றி பேட்டி அளித்ததை அப்போது பேப்பரில் பார்த்தேன்.

விஜய்யை நான் செந்தூரப்பாண்டி படத்தில் இருந்தே பார்த்து வருகிறேன்.. விஜய்க்கு அப்போது 17 வயது தான் இருக்கும். அப்போது முதலே என் பிள்ளையாகவே விஜய்யை பார்க்கிறேன்..எனக்கு அப்போது 38 வயதாகி இருக்கும். என் கணவர் மில்லில் வேலை பார்த்து வந்தார். அவர் இறந்துவிட்டார்.. என் மகன்களை நல்லபடியாக வாழ வைக்க வேண்டும் என்ற ஆசை தான் இருக்கிறது. என் மூத்த மகன் (விஜய்) நல்லபடியாக இருக்கிறார். இளைய மகன் வெங்கடேசும் நல்லபடியாக இருக்கிறார். எனக்கு வாழ வேண்டும் என்ற ஆசை கிடையாது.. மகன்களை நல்லபடியாக வாழ வைக்க வேண்டும் என்பதே என் ஆசை.. விஜய்யின் கல்யாண படத்தை அம்பையில் அந்த காலத்தில் வாங்கினேன்" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+