தெற்கில் வரும் பெரிய திட்டம்.. நெல்லைக்கு வரப்பிரசாதம்.. கிடைத்தது ‘கிரீன்’ சிக்னல்!
நெல்லை: நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் சோலார் பேனல் தொழிற்சாலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம். 146 ஏக்கரில் அமைகிறது சோலார் பேனல் தொழிற்சாலை. இதன் மூலம் 3,150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
நெல்லை கங்கைகொண்டானில் ரூ.1,260 கோடியில் சிப்காட் சோலார் செல் உற்பத்தி தொழிற்சாலை அமைய இருக்கிறது. இந்த ஆலையில் 3 ஜிகா வாட் சோலார் செல் மற்றும் பிவி சோலார் மாட்யூல் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சோலார் செல் உற்பத்தி ஆலை அமைக்க சுற்றுசூழல் அனுமதி கோரி சோலார் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்.

கங்கைகொண்டான் சிப்காட்டில் 313 ஏக்கரில் டாடா நிறுவனத்தின் டிபி சோலார் நிறுவனம் ஏற்கெனவே ஒரு ஆலையை அமைத்துள்ளது. இந்தியாவில் சோலார் மின்சாரம் உற்பத்தி மிகப்பெரிய அளவில் ஆதரிக்கும் நிலையில், சோலார் பேனல் உற்பத்தியை அதிகரிக்க ரிலையன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் திட்டமிட்டு அதற்காகப் பல ஆயிரம் கோடி ரூபாய் தொகையை முதலீடு செய்து வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் விக்ரம் சோலார் நிறுவனம் தமிழ்நாட்டில் புதிய ஆலையை அமைக்கிறது. விக்ரம் சோலார் பிரிவு தமிழ்நாட்டில் 4 ஜிகாவாட் சோலார் போட்டோவோல்டாயிக் செல் உற்பத்தி தொழிற்சாலையைத் திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 1260 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்க உள்ளது. இத்திட்டம் மூலம் தமிழ்நாடு அரசின் அடுத்த 10 வருடத்தில் சோலார் மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தை எளிதாக அடைய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொழிற்துறை முதல் மக்கள் பயன்பாடு வரையில் மின்சாரத் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மாற்று மின்சார உற்பத்தி மிகவும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. இதற்காக சோலார் மின்சாரத்தை ஊக்குவிக்கத் தமிழ்நாடு திட்டமிட்டு இருந்த நிலையில், விக்ரம் சோலார் நிறுவனம், தமது ஆலையை கங்கைகொண்டானில் நிறுவுகிறது. இந்த சோலார் செல் உற்பத்தி தொழிற்சாலை மூலம் 3,150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை.. வேளாண்மை அலுவலர் பதவி! அப்ளை பண்ணுவது எப்படி? -
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications