அப்பாவுடன் விதை வாங்க போனவருக்கு சோகம்.. எமனாக வந்த கார்.. சங்கரன்கோவிலில் பரிதாபம்
Recommended Video
நெல்லை: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் விவசாயத்திற்காக விதை வாங்க தந்தை மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கருத்தானூர் கிராமத்தை சேர்ந்தவர் காசிராஜன் வயது 65, இவர் கூட்டுறவு ரேசன் கடையில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவர் தனது மகன் இளையராஜா வயது 35. இருவரும் விவசாயத்திற்காக விதை வாங்க சங்கரன்கோவிலுக்கு சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

மலையான் குளம் அருகே
இருசக்கர வாகனத்தை காசி ராஜனின் மகன் இளையராஜா ஓட்டினார். காசிராஜன் பின்னால் அமர்ந்து இருந்தார். இருசக்கர வாகனம் கழுகுமலை - சங்கரன்கோவில் சாலையில் மலையான்குளம் அருகே வந்த கொண்டிருந்தது.

பயங்கர மோதல்
அப்போது மதுரையில் இருந்து மணிகண்டன் வயது 35 என்பவர் ஓட்டி வந்த கார், இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் தந்தை மகன் இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள்.

மருத்துவர்கள் தகவல்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குருவிகுளம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய தந்தை, மகனை சங்கரன்கோவில் அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர் இருவரும் உயிரிழந்ததை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தந்தை, மகனின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கிராமத்தில் சோகம்
இந்த விபத்து குறித்து குருவிகுளம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் உரிமையாளர் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை மகன் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் கருத்தானூர் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications