இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி விற்பனை.. அடுத்தடுத்து 5 பேரை தட்டித் தூக்கிய நெல்லை போலீசார்!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் நாட்டு துப்பாக்கியை வடமாநிலத்தில் இருந்து வாங்கி கூலிப்படையிடம் விற்பனை செய்ய முயன்ற வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் அடுத்தடுத்து 5 பேர் சிக்கி உள்ளனர். இன்ஸ்டாகிராம் மூலமாக கூலிப் படையினருக்கு துப்பாக்கி விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

பொங்கலை முன்னிட்டு நெல்லை மாநகர காவல் ஆணையர் மணிவண்ணன் உத்தரவின் பேரில், நெல்லை மாநகரில் இரவு நேரத்தில் விடிய விடிய வாகன சோதனை நடந்தது. 600 போலீசார் இரவு முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையே, திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவர் மூலம் நெல்லை மேலப்பாளையத்திற்கு நாட்டுத் துப்பாக்கி ஒன்று அனுப்பப்பட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Nellai gun police

இதையடுத்து, போலீசார் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அமீர் சுகைல் (24) என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்களை பறிமுதல் செய்த போலீசார், ஆமீர் சுகைலை கைது செய்தனர்.

அமீர் சுகைல், துப்பாக்கியை பெற்று தனது வீட்டில் யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் வைத்திருந்திருக்கிறார். தன்னிடம் துப்பாக்கி இருப்பதை பல்வேறு கூலிப்படையினரிடம் தெரிவித்திருக்கிறார். சரியான விலை வரும் வரை காத்திருந்த அமீர் சுகைல் குறித்து நெல்லை மேலப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தான் அமீர் சுகைல் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் ஒரு நாட்டுத் துப்பாக்கியை அமீர் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. காவல்துறையினர் அதை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அமீர் சுகைல் தனக்கு துப்பாக்கியை வாங்கி தந்தது பாலா என்பவர் எனத் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் பாலாவையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் பாலா (42). இவர் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக நாட்டுத் துப்பாக்கி ஒன்றை விற்பனை செய்வதற்காக நெல்லைக்கு வாங்கி வந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து நெல்லை மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அமீர் சுகைல் இதுபோன்ற நாட்டு துப்பாக்கிகளை சட்டவிரோதமாக வாங்கி கூலிப்படையினருக்கு சப்ளை செய்து தொழில் செய்து வருகிறார். பாலா தனது நாட்டு துப்பாக்கியை கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரூ.1.25 லட்சத்தை பெற்றுக்கொண்டு அமீர் சுகைலிடம் நாட்டு துப்பாக்கியை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது

இது தொடர்பாக நெல்லை மாநகர காவல் ஆணையர் மணிவண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நெல்லை காவல் ஆணையர் மணிவண்ணன், நெல்லை காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம் ஆகியோர் அமீர் சுகைலிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய நெல்லை ரஹ்மானியாபுரத்தைச் சேர்ந்த முசபில் முர்ஜித் (வயது 21) என்ற இளைஞரையும் கைது செய்தனர். பாலா நெல்லை மத்திய மாவட்ட திமுகவில் பொறியாளர் அணி நிர்வாகியாக உள்ளார். இவர் இன்ஸ்டாகிராம் வாயிலாக துப்பாக்கி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

துப்பாக்கி விற்பனை விவகாரத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும், குறிப்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்வதற்காக, நெல்லை தனிப்படை போலீசார் திண்டுக்கல் விரைந்தனர். அங்கு தீவிர விசாரணை நடத்திய போலீசாரிடம் திண்டுக்கல், பேகம்பூரைச் சேர்ந்த ஷாகுல் (45) என்பவரை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய திண்டுக்கல்லைச் சேர்ந்த ஷேக் (25) என்பவரும் சிக்கினார்.

கைதான 5 பேர் மீதும் ஆயுதத் தடைச் சட்டப்பிரிவுகள் 25(1), 27(1), அமைப்பு ரீதியான குற்றங்களை தடுக்கும் சட்டமான பிஎன்ஸ் 111(4), பயங்கர ஆயுதத்துடன் சட்டவிரோதமாக ஒன்று கூடுதலை தடுக்கும் பிஎன்எஸ் 191(2), 191(3) ஆகிய கடும் சட்டப் பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கள்ளத் துப்பாக்கி விற்பனை விவகாரத்தில் போலீசார் அடுத்தடுத்து 5 பேரை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+