மாஞ்சோலைக்கு மகிழ்ச்சி.. பெரிய நிதி? டிஎன்பிஎஸ்சிக்கு புதிய பணியாளர்? அமைச்சர் மதிவேந்தன் கலக்குறாரே

Subscribe to Oneindia Tamil

நெல்லை: வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டு பன்றி நீக்கம் தொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்... நெல்லையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களிடம் பேசும்போது இந்த தகவலை வெளியிட்டார்.
நெல்லையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், வனத்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.. இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மதிவேந்தன் சொன்னதாவது:

manjolai tnpsc Mathiventhan TN Forest Department

வனத்துறை: வனத்துறையில் பணியாளர் பற்றாக்குறையை போக்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் புதிய பணியாளர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. யானைகளை கண்காணிக்க, பாதுகாக்க வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட பலர் இருக்கிறார்கள். இதற்காக கூடுதல் நிதியும் முதலமைச்சர் ஸ்டாலின் ஒதுக்கி இருக்கிறார். இதற்காக தனியாக குழு அமைக்க முடியாது.

காட்டுப் பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்குவது குறித்து ஏற்கனவே சட்டமன்றத்தில் பேசியிருக்கிறேன்.. எனவே, இதுகுறித்து அரசாணை விரைவில் வெளியிடப்படும். இது தொடர்பான நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

மாஞ்சோலை: மாஞ்சோலை விவகாரத்தில் கோர்ட்டில் வழக்கு உள்ளது. அதனால், அதைப் பற்றி பேச முடியாது... ஆனால், வனத்துறை சார்பில் நீதிமன்றத்தில் நிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது..

மணிமுத்தாறு பகுதியில் அமைய இருந்த பல்லுயிர் பூங்கா நெல்லை மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட விவகாரம் குறித்து வனத்துறை அதிகாரிகளுடன் பேசி இது தொடர்பாக பதில் அளிக்கிறேன். இடம் தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருக்கலாம்... அதனால் வேண்டுமானால் மாற்றப்பட்டு இருக்கலாம்.

வனப்பாதுகாப்பு: மாஞ்சோலை சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளதா என்பதை பரிசீலனை செய்து வருகிறோம். வனத்தையும் பாதுகாக்க வேண்டும், அதேசமயம் வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும்... எங்களுக்கு மக்களும் மிகவும் முக்கியம். எனவே, இவை அனைத்தையுமே கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

வனப்பகுதியில் குற்றங்களை குறைக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. அந்தவகையில், தென்காசி மாவட்டத்தை பிரித்து 5 வருடங்களாகிவிட்ட நிலையில், தனி மாவட்ட வன அலுவலர் நியமிக்கும் பணி பரிசீலனையில் உள்ளது. விரைவில் இதுகுறித்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார் அமைச்சர்.

சபாஷ்: மாஞ்சோலை சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளதா என்பதை பரிசீலனை செய்து வருவதுடன், வனத்துறைக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலம் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்திருக்கும் இந்த தகவல்கள் தமிழக மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.

முன்னதாக, நெல்லை மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் விவகாரத்தில் நீதிமன்ற அறிவுறுத்தல்படி அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நடந்து முடிந்த சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் மதிவேந்தன் பதிலளித்திருந்தார்.. யானை வழித்தடங்கள் குறித்த மக்கள் கருத்துகளை கேட்டறிந்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியிருந்த நிலையில், இன்றைய தினம் அமைச்சர் மதிவேந்தன் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள், கவனம் பெற்றுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+