திருநெல்வேலிக்கே அல்வா.. 14 கோடிக்கு விபூதி? சிறு மழைக்கே வஉசி மைதானத்தின் மேற்கூரை காலி
திருநெல்வேலி: திருநெல்வேலியில் அரைமணி நேரம் பெய்த மழைக்கே வ.உ.சி மைதானத்தின் மேற்கூரை தாங்கவில்லை. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ்கட்டப்பட்டு கடந்த 7 மாதத்திற்கு முன்பு தான் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த மேற்கூரை சாதாரண மழைக்கு இடிந்த பெயர்ந்து விழுந்துவிட்டது. யாரும் அருகில்இல்லாததால் பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்படவில்லை.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சிகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருநெல்வேலி மாநகராசியிலம் பல்வேறு பணிகள் செய்யப்படுகின்றன. பேருந்து நிலையங்கள் சீரமைத்தல், வணிக வளாகங்கள், விளையாட்டு அரங்குகள் சீரமைப்பது போன்ற பணிகளில் பல கோடிகளில் நடைபெற்று வருகிறது.

அப்படித்தான் திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கூரை உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்து சீரமைக்கப்பட்டது .
வ.உ.சி மைதானத்தின் அரங்கத்தைச் சுற்றி இருபுறமும் இருக்கைகளுடன் கூடிய கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளது, நவீன மேற்கூரைகளும் அமைக்கப்பட்டுள்ளது.இந்த மைதானம் 7 மாதங்களுக்கு முன்பு தான் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் திங்கள்கிழமை பிற்பகல் நெல்லை மாநகரில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை விழுந்தது.

நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. பாளையங்கோட்டை பகுதியில் பெய்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கேலரியின் மேற்கூரை ஒன்று பெயர்ந்து அடியோடு சரிந்து விழுந்தது.
மேற்கூரை இலகுவாக அமைக்கப்பட்டிருந்ததும், காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் மேற்கூரை அங்கும் இங்கும் ஆடியதுடன் சிமென்ட் கலவையுடன் மேற்கூரை தலைகீழாக சரிந்து விழுந்தது. நல்லவேளையாக பொதுமக்கள் யாரும் அந்த கேலரியில் இல்லாததால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை.

வஉசி மைதானத்தில் காலை மற்றும் மாலையில் மக்கள் அதிகமாக நடைபயிற்சி மேற்கொள்வார்கள். நல்லவேளையாக பிற்பகலில் இந்த மழையும், அதனால் உடைந்து விழுந்த மேற்கூரையும் எந்த பாதிப்பையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தவிலை. சீரமைக்கப்பட்ட சில மாதங்களிலே நடைபெற்ற இந்த பெரும் விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்று திமுகவினர் குற்றம்சாட்டுகிறார்கள். அதிமுகவினரோ திமுக ஆட்சியில் தான் திறந்து வைக்கப்பட்டது என்று குற்றம்சாட்டுகிறார்கள்.
இதனிடையே பொதுமக்களே அரசின் அலட்சியம் காரணமாக 14 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்ட மைதானத்தின் மேற்கூரை சாதாரண மழைக்கே இடிந்து விழுந்துவிட்டதாக குற்றம்சாட்டி உள்ளனர். ஒப்பந்ததாரர் மீது அரசு கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
இதற்கிடையில் தகவல் அறிந்து மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி மைதானத்திற்கு உடனே வந்து ஆய்வு மேற்கொண்டார். விபத்து குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மழை மற்றும் காற்று காரணமாக மேற்கூரை இடிந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணைக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications