நெல்லை: இன்ஸ்டாகிராமில் எப்ப பார்த்தாலும் டான்ஸ்.. மனைவியை கொலை செய்த கணவன்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: இன்ஸ்டாகிராமில் நடனமாடுவதை மனைவி கைவிடாததால் ஆத்திரம் அடைந்து கொன்றதாக கணவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த தெற்கு வாகைக்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (40). இவரது மனைவி ராமலட்சுமி (35) இத்தம்பதிக்கு 15 வயதில் ஒரு மகனும் 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

திருப்பூரில் கார் மெக்கானிக்காக வேலை பார்க்கும் கல்யாண சுந்தரம் அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார். ராமலட்சுமியும் அங்குள்ள சொந்த கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

குடும்ப பிரச்சினை

குடும்ப பிரச்சினை

இந்த நிலையில் கடந்த மாதம் 13 ஆம் தேதி குடும்ப பிரச்சினை காரணமாக ராமலட்சுமி தனது குழந்தைகளுடன் தெற்கு வாகை குளத்தில் உள்ள தனது தந்தை பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் நேற்று முன் தினம் மதியம் வீட்டில் தனியாக இருந்த ராமலட்சுமியை அவரது கணவர் கல்யாண சுந்தரம் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டார்.

மானூர் காவல் நிலையம்

மானூர் காவல் நிலையம்

இதை கவனித்த அக்கம்பக்கத்தினர் மானூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்ததின் பேரில் அங்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டனர்.

ராமலட்சுமி

ராமலட்சுமி

இந்த நிலையில் ராமலட்சுமியின் நடத்தை மீது கல்யாண சுந்தரத்திற்கு சந்தேகம் இருந்ததால் அவர் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கல்யாண சுந்தரத்தை போலீஸார் தேடி வந்த நிலையில் அவர் நேற்று மானூர் அழகிய மண்டபம் அருகே பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

விசாரணை

விசாரணை

இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் கூறுகையில் என் மனைவி அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். அதை நான் கண்டித்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை. மேலும் டிக்டாக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஐடிக்கள் மூலமாக சினிமா பாடல்களுக்கு டான்ஸ் ஆடினார்.

குடும்ப பிரச்சினை

குடும்ப பிரச்சினை

அப்போது அவரிடம் எச்சரித்தேன். நமக்கென குடும்பம் இருக்கும். இரு குழந்தைகள் இருக்கிறார்கள. எனவே இந்த டான்ஸ் ஆடும் பழக்கத்தை கைவிடு என கேட்டுக் கொண்டேன். ஆனால் மனைவி கேட்கவில்லை. இதனால் எங்களுக்குள் அவ்வப்போது குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

ஆத்திரத்தில் கொன்றதாக வாக்குமூலம்

ஆத்திரத்தில் கொன்றதாக வாக்குமூலம்

கடந்த மாதமும் எங்களுக்குள் இந்த டான்ஸ் ஆடுவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. அவர் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு போய்விட்டார். என்னுடன் இருக்கும் போதே இவர் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார். இன்னும் நான் அவருடன் இல்லாவிட்டால் இந்த ஆட்டம் அதிகமாகிவிடும் என்பதால் வீட்டுக்கு வருமாறு அழைத்தேன். அவர் வரவில்லை. இதனால் அவரை கொன்றேன் என வாக்குமூலம் அளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+