"சீக்கிரம் வண்டியை எடுங்க.." பிரசாரத்தை நிறுத்தி அக்கறை காட்டிய கனிமொழி.. சபாஷ் சொன்ன தென்காசி
தென்காசி: தென்காசியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிக் கொண்டிருந்த திமுக எம்பி கனிமொழி திடீரென தனது பேச்சை நிறுத்தி 5 நிமிடங்கள் ஒரு விஷயத்தில் அக்கறை காட்டிய சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி முதல் நகர்ப்புற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.
நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. அதற்குள் பிரச்சாரத்தை முடித்து விட அனைத்து கட்சிகளும் வேகம் காட்சி வருகிறார்கள். அந்த வகையில் திமுக எம்பி கனிமொழி தென்காசியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஆய்க்குடி
இன்றைய தினம் தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பகுதியில் வாக்கு சேகரிக்கும் போது, தூரத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வருவதைக் கவனித்துள்ளார். உடனே பிரச்சாரத்தை வேடிக்கை பார்ப்பவர்கள் மற்றும் திமுகவினரின் வாகனங்கள் வழி நெடுக இருந்ததை கண்டார்.

ஒலிபெருக்கு
இதையடுத்து கனிமொழி தனது பரப்புரையை 5 நிமிடம் நிறுத்தி விட்டு "ஆம்புலன்சுக்கு வழி விடுங்க..... சீக்கிரம் வண்டிய எடுங்க" என்று கூறி கொண்டே ஆம்புலன்ஸ் அந்த நெரிசலை கடந்து செல்லும் வரை ஒலிபெருக்கியில் வழிநடத்தினார்.

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ் சென்றவுடன் "இதுவும், தலைவர் கருணாநிதி கொண்டு வந்த 108 ஆம்புலன்ஸ் திட்டம்தான்" என்று தனது பரப்புரையைத் தொடர்ந்தார். ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீது அக்கறையுடன் கனிமொழி நடந்து கொண்ட விதத்தை பார்த்த தென்காசி மக்கள் பூரித்து போனர். இதே போல் முதல்வர் ஸ்டாலினும் பொறுப்பேற்ற சில நாட்களில் ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகின.

தலைமைச் செயலகம்
முதல்வர் ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை வீட்டிலிருந்து தலைமைச் செயலகத்திற்கு புறப்பட்ட போது ஒரு இடத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டு ஒதுங்கிச் செல்லும் காட்சிகளை சென்னை காவல் துறை ட்விட்டரில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications