நேற்று உதயநிதி ஸ்டாலின்.. இன்று நடிகர் விஜய்! KS அழகிரி அடித்த டபுள் கோல்! அரசியலில் இதெல்லாம் சகஜம்
நெல்லை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்கிறோம் என்றும் யாரும் யாரையும் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்ல முடியாது எனவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
நேற்று உதயநிதி ஸ்டாலின்: நீட் விலக்கு நம் இலக்கு என்ற முழக்கத்துடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுத்துள்ள கையெழுத்து இயக்கத்தில் நேற்று தான் கே.எஸ்.அழகிரி கையெழுத்துப் போட்டார். அதுமட்டுமல்ல சத்தியமூர்த்தி பவன் வந்த உதயநிதி ஸ்டாலினை வாசல் வரை வந்து வரவேற்று அழைத்துச் சென்றார். மேலும், உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் குறித்தும் அவரிடம் பாராட்டி பேசியிருந்தார் கே.எஸ்.அழகிரி.

விஜயை வரவேற்கிறோம்: இந்நிலையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நெல்லை சென்ற கே.எஸ்.அழகிரி அங்கு செய்தியாளர்களை சந்தித்த போது, நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்கிறோம் எனக் கூறியிருப்பதுடன் யாரும் யாரையும் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்ல உரிமையில்லை எனவும் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் 10 ஆண்டுகளுக்கு முன்பே ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேசியவர் என்பது இங்கே திரும்பிப்பார்க்கத் தக்கது.

திமுகவுக்கு தொந்தரவு: அரசியல் கட்சிகளில் இருக்கும் அணிகளை போலவே வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் பாஜக சொல்வதை மட்டும் செய்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் சோதனை நடத்தப்படுவதாகவும் கூறிய கே.எஸ்.அழகிரி இந்தியா கூட்டணியை திமுக வலிமையாக வழிநடத்துகிறது என்றார். இதனால் திமுகவுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் சோதனைகள் நடத்தப்படுவதாக பொதுமக்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள் எனக் கூறினார்.

உலகத்துக்கே தெரியும்: நீட் தேர்வால் எந்த பயனும் இல்லை என்பது உலகத்துக்கே தெரியும் என்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு பணத்தை குவிப்பதற்கு நீட் ஒரு வரப்பிரசாதம் என்றார் கே.எஸ்.அழகிரி. நெல்லையிலிருந்து தூத்துக்குடி செல்லும் அவர், அங்கு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்கிறார். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
-
விஜய் என்கிட்ட கேட்ட கேள்வி.. நான் எதிர்பார்க்கல! சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்! ஓபனாக பேசிய ராதாரவி -
கோவையில் கேபிள் டிவியில் ஓடிய விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம்.. உரிமையாளரை கைது செய்த போலீஸ் -
நேர்ல வரலனாலும் நேராகவே பேசுறாரே! ஹாலோகிராமில் கும்பகோணத்தை அதிரவைத்த AI விஜய் -
ஜனநாயகன் தயாரிப்பாளருக்காக விஜய் எடுத்த பெரிய முடிவு.. மூன்று பேருக்குள் போட்டி! ப்ளூ சட்டை மாறன் ரியாக்ஷன் -
Vijay: ஒரு நாள் பிரச்சாரம்! அடுத்த நாள் ரெஸ்ட்! தவெகவுக்கே ஓட்டு கேட்காத விஜய்! காங்கிரஸ் தப்பியது! -
எடப்பாடியில் "மிஸ்ஸிங்!" 233ல் ‘வாட்சிங்!’ தமிழகம் முழுக்க ரகசிய டீமை இறக்கிய விஜய்? பரபரக்கும் தவெக -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
அனுமதி கிடைத்தாலும்.. பிரச்சாரத்தை ரத்து செய்யும் விஜய்.. அதிர்ச்சியில் தவெக.. ரொம்ப மோசம்ப்பா! -
ஜனநாயகன் படம் லீக்கான விவகாரம்.. சிபிஎப்சிதான் காரணமா? தணிக்கை வாரியம் பரபர விளக்கம் -
விஜய் அட்டைக்கத்தி.. காற்றடித்தால் கதை முடிஞ்சுது.. திருச்சி கிழக்கில் உதயநிதி தக் -
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார் -
234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான்.. யார் என்ன செய்தாலும் வெற்றியை தடுக்க முடியாது - ஸ்டாலின் உறுதி












Click it and Unblock the Notifications